உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகாத்திரி

வானவர்க்கே (தேவா. 3, 52, 3), அழகன் ஆடுமே (காரை. பதிகம் 2, 2). அட்டமூர்த்தி அழகன் (திருவாச. 42,2). முன்னொருகால் அழகனை இந்திரன்றன் பாவம்முழுதும் விட அருச்சித்த (திருவால. பு. 2, 1). அந்திப்பிறைசூடிய...அழகா (திருத்தணி.பு. வீராட்ட 11).3. திருமால். குழலழகர், வாயழகர் (நாச்சி.தி. 11, 2). 4. இராமன். அல்லையாண்டமைந்த மேனி அழகன் (கம்பரா. 2,12,42). 5. முருகன். பகை நிசிசரர்கள் மனதையும் இனிது பருகிய அழகன் வருகவே (திருமலைமுரு. பிள்.60).

.

அழகாத்திரி பெ. அழகர்மலை. (வட். வ)

அழகாத்திரிவெட்டு பெ. பழைய நாணயவகை. (மாதை. பணவிடு. 132)

அழகாம்பண்டம் பெ. ஓடு. (போகர் நி.20)

அழகாமவாதி பெ. நாகமணல். (முன்.)

அழகார்புத்தூர் பெ. திரு அரிசிற்கரைப் புத்தூர். அழ கார் (திருப்) புத்தூர் அழகனீரே (தேவா. 7, 9, 1).

அழகாரம் பெ. அழகான பேச்சு, வீண் புகழ்ச்சிப் பேச்சு. (வின்.)

அழகானகருப்பி பெ. நீலஞ்சோதிச்செடி வேர். (சாம்ப.

அக.)

அழகி பெ. 1. அழகுள்ளவள். அழகி கூத்தாடுகின் றாள் அரங்கின்மேல் அரம்பையன்னாள் (சீவக. 1254). 2. தஞ்சைப் பெருங்கோயில் கட்டியபோது கொத்தருக்கு நீர்மோர் அளித்த கிழவி. (நாட்.வ.) அழகிது கு. வி. மு. வியப்பு எள்ளற் குறிப்பு உணர்த்தும் சொல், நன்று. அழகிதழகிது என அழகன் எதிர்கொள் பரிசுபட (கம்பரா 6, 30, 160). எழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே அழகிது பெரிது நம் அரச வாழ்க்கையே (சூளா.684). வலியை முகந்தெடுத்த சக்கரமொய்ம்பன் என்பது அழகிது (தக்க. உரை). நோற்றுத் திரிந்தவா றழகிதாமே (சி. சி. பர. 10 சௌத். மறு.).

239 ப.

...

அழகியநம்பி பெ. தமிழ்க் குருபரம்பரை ஆசிரியர். குரு பரம்பரை இன்பமுறும் அழகிய நம்பிப் பேர்

...

பூண்ட எழிலுடையான் தமிழதனால் இசைத்த பாடல் (அரிசமய. முகவுரை ப. 4).

அழகியம் பெ. வெள்ளியைப் போன்ற வெண்மை நிறம் கொண்டதும்

அரிப்பினைத் தடுக்கத் தக்கதுமாகிய

உலோகம். (எந்திர. க.சொ.ப.186)

447

அழகு1

அழகியமணவாளதாசர் பெ. பதின்மூன்றாம் நூற்றாண் டில் வாழ்ந்து திருவரங்கக் கலம்பகம் முதலிய நூல் களை இயற்றிய புலவர் பிள்ளைப் பெருமாளையங்கார். அழகிய மணவாள தாசனென்பவன் அடியவரடிசூடி வாழும் அன்பனே (திருவரங். கலம். 101).

அழகியமணவாளன் பெ. திருவரங்கம் பெரிய கோயிலில் பள்ளிகொண்டிருக்கும் திருமால், திருவரங்கநாதன். அணிதிரு அரங்கர் மணிதிகழ் முகுந்தர் அழகிய மணவாளர் கொற்றப் புயங்களே (திருவரங். கலம். 7). அழகிய மணவாளனுடைய கடாட்சம் பெறுதல் (குருபரம். ஆறா. ப. 9).

அழகியல் பெ. 1.

அழகு இலக்கணம். (மானிட. க.

சொ. ப. 113). 2. (இக்) கவின்கலைத் தத்துவம். (புதிய வ)

அழகியவாணன் பெ.

அழகியார்

பெ. நெல்வகை. (வின்.)

பெ. உள்ளத்தில் பத்தி அமைந்தவர்கள். சித்தம் அழகியார் பாடாரோ (திருவாச. 7,3).

அழகியாள் பெ. செவ்வகத்தி. (சாம்ப. அக.)

அழகியான் பெ. அழகுடையவன். அழகியான் தானே அரிஉருவன் தானே (இயற். நான்முகன் திருவந்.22).

...

அழகு1 பெ. 1. புலன்களுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகின்ற தன்மை, பதினாறு பேறுகளுள் ஒன்று. பால் ஆர்ந்து அமளிதுஞ்சும் அழகுடைநல்இல் (பெரும்பாண்.251-252). அழகு அமை புனைவினை (கலித்.59,6). குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டு அழகும் மஞ்சள் அழகும் அழகல்ல ... கல்வி அழகே அழகு (நாலடி. 131). ஆடலும் பாட லும் அழகும் (சிலப். 3, 8). அடுமதில் பாய அழிந் தன கோட்டைப் பிடிமுன்பு அழகு அழிதல் நாணி (முத்தொள். 17). அம்மையும் அழகும் கொம்மை யொடு கழுமி (பெருங். 1,40,210). அழகால் அமைந்த உருவுடை மங்கையும் (தேவா. 4,88,6). அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு (பெரியாழ். தி. 1, 4, 5). அழகெலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் (கம்பரா. 1,21,20). யோகம் அறிவு அழகு பதினாறு பேறும் தருவாய் (பெருந்.418). அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து (முக்கூடற். 40). அழகு உள்ள கொண்டுவந்தே (பாரதி. கண்ணன். 9). 2. இன்பம். சந்தமும் தருமமும் அழகும் மகிழ்வும் சுகம் (பிங். 1786). எனது உயிர்கெடல் அழகாமோ (திருப்பு. 112). 3. சிறப்பியல்பு. வேள்வியின் அழகுஇயல்

...

மலர்