உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளக்கர்2

கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம் அணங் குடை அளக்கர் வயிறுபுக்காங்கு (மணிமே.17, 11- 12). ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் (கம்பரா. 1, 4, 5). அளக்கர் ஏழும் ஒன்றாம் எனும் பெருமை (பெரியபு. 28, 1193). கரைகாண்கல்லாக் கற்பனை அளக்கர் (ஞானா. 46, 1). அதிர்வளை தடியும் அளக்கர் ஆகியும் (கல்லாடம் 11, 10). அளக் கர் வண் சேது (சேதுபு. அவை, 5).

அளக்கர்' பெ. உப்பளம். அளமே கானல் அளக்கர் உப்பளம் (பிங்.592)

...

அளக்கர்' பெ. சேறு. அளறு பூமி அளக்கர்... சேறே (முன். 606).

அளக்கர்' பெ. மண்ணுலகு, பூமி. மண்ணுலகு, பூமி. கடலும் புவியும் அளக்கர் என்ப (முன்.3104). அளக்கர் (அரும்.நி.613).

...

...

புடவி

அளக்கர்' பெ. நீள் வழி. நீள் வழி அளக்கர் (பிங்,

484).

அளக்கர்' பெ. கார்த்திகை நட்சத்திரம். அறுமீன்..... அளக்கர் கார்த்திகை தன்பெயர் (முன். 241).

...

அளக்கரர் பெ. உப்பளவர். (சாம்ப. அக.)

அளக்காய் (அளக்கம்) பெ. வெள்ளெருக்கு. (வாகட அக.)

அளக்குநர் பெ. நாழிகை அளந்துசொல்லும் கணக்கர். பெரும்பகல் நாழிகை பிழையாது அளக்குநர்

(பெருங். 1,57,79).

அளக்கூறுபாடு பெ. அளவின் பிரிவு. (சாம்ப. அக.)

அளகக்கொடி பெ. அளகவல்லி என்னும் அணிகலன். நடத்தொறும் இணர்ப்போது அலங்கல் அளகக் கொடி (சூளா. 450).

அளகக்கொத்து பெ. கூந்தல்

கற்றை. அளிவர்க்

கத்து அளகக் கொத்தினரே (தக்க. 98).

அளகசூடம் பெ. ஆடவர்க்கும் மகளிர்க்கும் குழந்தை களுக்கும் பொதுவாக உரிய எளிய தலைக்கோல வகை. (சிற். செந். ப.87)

அளகத்தி பெ. கூந்தலுடையவள். சீவிக்கோதி முடித்த அளகத்திகள் (திருப்பு.984).

அளகப்பந்தி பெ. (ஒழுங்காக அமைந்த) கூந்தல்நிரை. சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்தி (பெரியபு.

28, 1096).

168

அளகம்"

அளகப்பொடி பெ. முன் நெற்றிச் சுருளில் தடவும் வாசனைச் சுண்ணம். அஞ்சிலோதிய ராரளகப் பொடி (சூளா. 126).

அளகபந்தி பெ. (ஒழுங்காக அமைந்த) கூந்தல் நிரை அளகபந்தி மிசை அளிகள் பந்தரிடும் (கலிங். 60). அளகபந்தி திருமுகம் மறைப்ப நீக்கி (கம்பரா. 1, 17. 6). புயல் எனத் திரள் அளகபந்தியும் (வைகுந் பிள்.610). நல்லார் அளகபந்தி என இருண்ட ... கா (இரகு. திக்கு.12).

அளகபாரம் பெ. கூந்தல். அளகபாரம் மிசையசைய (கலிங். 53). அளகபாரம் அலைந்து குலைந்திட (திருப்பு. 97).

அளகபேதம் பெ. அதிவிடயம் என்னும் மருந்துச்செடி. (செ. ப. அக. அனு.)

அளகம் 1 (அலகம்: அழகம் 2) பெ. 1. ( பெண்களின் )முன் நெற்றிச் சுருள் மயிர். மதியத்து அகன்நிலாப் போல அளகம் சேர்ந்த சிறுநுதல் (நற்.377,8). திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும் (சிலப். 8, 74). அலமரு திருமுகத்து அளகத்து அப்பிய செம் பொற்சுண்ணம் (பெருங். 1,33, 119-120). அளக மும் நுதலும் தகைபெற நீவி (இறை. அக. 2 உரை). மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழையொக்கும் வடித்த கூந்தல் (கம்பரா. 3. 7,70). அளகம் சேர் வாணுத லும் (சூளா. 1119). 2. (பொதுவாகப்) பெண்

ணின் கூந்தல், குழற்கற்றை. சுள்ளி சுனை நீலம் ... அள்ளி அளகத்தின் மேல் ஆய்ந்து (திணைமாலை. 2). அளக வனிதையர் (கலிங். 57). செருந்தி மிக்க மலர் எல்லாம் அளகமலர்க் காவின் அலர (மதுரைச். உலா 321). அளகம் திருத்தி மதிநுதல் நீவி (அம்பி. கோ. 32). அல் அன அளகத்து (திருப்பு. 33).கண் தலம் கார் அளகம் கெண்டை (திருவரங். அந். 74). 3. ஐவகையாக முடிக்கப்படும் கூந்தலுள் ஒருவகை, பனிச்சை. கொய்பூந்தாது கொண்டு அள கத்து அப்பி (சீவக. 2948 அளகம்-பனிச்சை. நச்.). அளக முகில் இருபுடையினும் அதிரவும் (தக்க. 42 அளக

மான பனிச்சை

அளகம்' பெ.

...

-

ப. உரை).

1. நீர். ஆலமும் கலமும் அளக மும் நீர் எனலாகும் (பிங். 57). செய்யார் அள கம் மிகும் சிங்கை (சிங். சிலே. 60). 2. மழை மழை (அரும். நி. 597). வெள்ளநீர். அளகம் பேணும் பிரவாகநீத்தம் பிர ளையம் வாரிவெள்ளம் (கயா.நி.38).

நீர். அளகமே

...

3.