உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளப்பு 2

000

அரியவை (பரிபா. 4, 61). மாலுக்கும் நான்முகற் கும் அன்றும் அளப்பரியான் (காரை. அந். 19). வானம் கைத்தவர்க்கும் அளப்பு அரிய வள்ளலை (தேவா. 7, 67, 1). அளப்பரும் தன்மைய ஊழி அம் கங்குல் (நம். திருவிருத். 59). அளப்பு அரிய நான்மறையினான் அசலன் என்பான் (சீவக. 1790). செங்கண் மால் பிறந்து அளப்பருங் காலம் திருவின் வீற்றிருந்தனன் (கம்பரா. 1, 3, 6). அரும்பெறல் உலகம் எல்லாம் அளப்பரும் பெருமை காட்டி (பெரியபு. 10,16). (பெரியபு. 10,16). 2. எல்லை. ஈசனை அளப்பில காலம் இதயமேல் உன்னி நோற்றே (கந்தபு. 6, 12, 32). அளப்பு இல்காட்சி ... சடைமுடியார் (சேதுபு. நாட்டுச். 11). ஆயிரம் பெயர் இறைகலை அளப்பில் உளவால் (செ. பாகவத. 1, 1, 21).3. ஆராய்ந்தறிகை. அருமறை யாகம் முதனூ லனைத்து முரைக்கையினால் அளப்பரிதாமப் பொருளை (சி. சி. 8. 14). செல்லுவதே பேரளப்பு என்று ஓர்ந்தவன் (பஞ்ச. திருமுக. 1530). 4. ஊழ். (சங். அக.)

அளப்பு' பெ. 1. வறிதே பேசுகை. (செ.ப.அக.) 2. மன நிறைவின்றி முணுமுணுக்கை. (நாட் .வ.)

அளப்புக்கு பெ. முடக்கொற்றான் கொடி. (வைத். விரி.

அக. ப. 24)

அளப்புசுரு பெ. முடக் கொற்றான்.

அளப்பூர் பெ. சோழ நாட்டுச் சைவத்

...

(வாகட அக.)

திருத்தலம்.

அச்சிறுபாக்கம் அளப்பூர் அம்பர் ஏகம்பத்தும் கயிலாய நாதனையே காணலாமே (தேவா. 6,

70, 4).

அளப்போன் பெ. வியாழன். நைவரும் அளப்போன் கூவினான் புருகூதன் கேட்ப (பெருந்.பு.34,38).

அளபிற -த்தல் 12 வி. (இலக்.)

எழுத்துக்கள் தமக்

குரியமாத்திரையின் அளவினைக் கடந்து ஒலித்தல். அளபிறந்துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உள் வென மொழிப (தொல். எழுத். 33 இளம்.).

அளபு பெ. 1. (இலக்.) எழுத்து ஒலிக்கும் கால அளவு, மாத்திரை. மெய்யின் அளபே அரையென மொழிப (தொல்.எழுத்.11 இளம்.). மூவளபு இசைத்தல் (தொல். எழுத். 5 மூன்று மாத்திரையாக ஒலித்தல் இளம்.). 2. (இலக்.) அளபெடை. குற்றுயிர் அளபின் ஈறாம் (நன். 108). அளபு எனினும் அளபெடை எனினும் புலுதம் எனினும் ஒக்கும் (யாப். காரிகை 1 குணசா.).

41

71

அளம்3

அளபெடு-த்தல் 11 வி. (இலக்.) எழுத்து அதற்குரிய மாத்திரையின் மிக்கு ஒலித்தல். ஒற்றளபெடுப்பினும் (தொல். பொ. 326 இளம்.). நெட்டெழுத்து அள

பெடுத்து வரும் எனின் அவ்விரண்டும் நேர் நேர் ஆதலும் (இலக். வி. 743 உரை).

...

அளபெடை பெ. 1. (இலக்.) செய்யுளில் எழுத்துக்கள் தமக்குரிய அளவினும் மிகுதியாக ஒலிக்கை. அள பெடை மிகூஉம் இகர இறுபெயர் (தொல். சொல். 125 சேனா.). அளபெடை ஆ ஈஇ (தொல். பொ. 311 இளம்.).உயிர்மெய் இரட்டுநூற்றெட்டு உயர் ஆய்தம் எட்டு உயிர்அளபு எழுமூன்று ஒற்றள பெடை (நன். 61).2. அளபெடை கொண்ட சொல். (இலக்கண வ.).

அளபெடைத்தொடை பெ. (யாப்.) பாவின் அடிதோறும் முதற் சீர்க்கண் அளபெடை வருமாறு தொடுக்கை. அளபெடை ஒன்றுவது அளபெடைத்தொடையே (யாப். வி. 41). அந்நான்கேயன்றித் தொடைவகை ஐந்தெனவும்படும் அளபெடைத் தொடையொடு தலைப்பெய்ய என்றவாறு (தொல். பொ. 401 பேரா.). அளபெடைவண்ணம் பெ. அளபெடைமிகுதியாக வரும் ஓசை விகற்பம். அளபெடை பயின்று வருவது அள பெடை வண்ணமாம் என்றவாறு (தொல். பொ. 520 இளம்).

அளபெழு -தல் 4 al. (இலக்.) எழுத்து அதற்குரிய மாத்திரையின் மிக்கு ஒலித்தல். இசை கெடின் ... அளபெழும் (நன். 91). நெட்டெழுத்து அளபுஎழின் நேர் நேர் ஆதலும் (இலக். வி. 743).

அளம்1 பெ. 1.உப்பளம். நெடுநெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் அளம் போகு ஆகுலம் கடுப்ப (நற்.354, 9-10). அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும் (கம்பரா. 1, 2, 54), ஆயபேரளத்து அளவர்கள் உப்பு (பெரியபு. 19, 34). செம்பியன் வளவதரையனேன் பெரும்பாடி அளத்தில் (தெ.இ. க.8,25).2. உப்பு. அளமே அகட்டுப்பு (அரும்.நி.

594).

1.

அளம்' பெ. கடல். அளம்பெறும் துரும்பு ஒத்து ஆவியோடு ஆக்கை ஆனந்தமாக (தாயுமா.19,3). 2. நெய்தல் நிலம். நீர் மலர் நிரைத்தாது அளஞ் செயப்பாடல் வண்டறையும் புறவார் பனங்காட் டூர் (தேவா. 2,53,2).

அளம்' பெ. சேற்றுநிலம், களர். (த.த.அக.)