உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவு?

தனம்

அண்டர்போற்றும்

2. மெய்யறிவு. அளவினீர் (தேவா. 2, 58, 3). அனுமன் என்பவன் அளவு அறிந் (கம்பரா. 4, 9, 67). போக்கிதை அளவு இறந்து இருப்பதான திருவாழி (திருவாய்.3, 7, 3 ஈடு). 3.(ஒரு கருத்தினை /கொள்கையை மெய்ப்பித்தற்கு மேற்கொள்ளும்) தருக்கப் பிரமாணம். ஆற்றின் அளவறிந்து கற்க(குறள். 725). கருத்தளவாவது குறிக் கோள் அனுமானத்து அனுமேயத்தகைமை உண ரும் தன்மை யதாகும் (மணிமே. 27, 25-27). அளவு இன்மை பூதம் ஆதியாம் உலகம் (ஞானா. 21,27). உருவினால் அளவால் உணர்த்தலானும் (சி.சி. சுப. 234). 4. நில அளவு. (செ.ப. அக.) 5. கால அளவு, பொழுது. புல்லிக்கிடந்தேன் புடைபெயர்ந் தேன் அவ்வளவில் அள்ளிக் கொள்வற்றே பசப்பு (குறள். 1187). கவ்விய நிசி ஒரு கடையுறும் அள வின் (கம்பரா. 3, 2,35). தறைப்படும் அளவில் தத்தா நமர் எனத்தடுத்து வீழ்ந்தார் (பெரியபு. 5, 16).சிலமகன்றில்கள் நல்ல அளவு என்று முகங்காட்டித்தனவாக (திருவாய் 1, 4, 4 ஈடு). 6. தாளத்தில் மூன்று மாத்திரைக்காலம். கொட்டும் அசையும் தூக்கும் அளவும் ஒட்டப்புணர்ப்பது பாணியாகும் அளவு மூன்று மாத்திரை (சிலப். 3,16 அடியார்க்.).

800

...

...

அளவு? பெ. 1. ஒன்றன் தன்மை, இயல்பு, பொருத் தம். அல் அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது (மலைபடு. 33). தன்னளவு அரசர்க்கு உணர்த்தி (சிலப். 11, 17). காமனைக் காய்ந்தவன் அளவு காணலுற்றார் இருவர் (தேவா. 5, 95, 9). நிலை அளவில் நின்ற நெடியவர் (ஏலாதி 29). மென்கால் போதத்து அளவே தவழ்வித்து (கம்பரா. 2,4,38). அவையினது அளவை அறியாது ஒன்றைச் சொல்லுதலை மேற்கொள்பவர் (குறள். 720 மணக்.). அந்தரத்து விரல் தொழில்கள் அளவுபெற அசைத்து இயக்கி (பெரியபு. 14, 27). 2. எல்லை. அளவிறந்து ஆவது போல (குறள். 224). ஊழிநாள் அளவும்... உலைவுறா (சீவல. கதை 6). பகவன் அளவறு கருணை (கம்பன் பிள். பாயி. 14). அளவு இலா உவகையுள் ஆழ்ந்தார் (சான்றாண்மை 192).

அளவு-தல் 5 வி. 1. கலத்தல். 1. கலத்தல். அகத்திணை மருங் கின் அளவுதல் இலவே (தொல். பொ. 58 இளம்.). புறத்திணைக்கண் இயற்பெயர் அளவி வரும் (தொல். பொ. 55 நச்.). சந்தின் தழலைப் பனிநீர் அளவித்தடவும் கொடியீர் (பெரியபு. தடுத்தாட். 175). தேனில் அளவும் தீஞ்சொல் (கூர்மபு.பூருவ, 30, 71). 2. உசாவுதல். அலமரல் உள்ளமொடு அளவிய விடத்தும் (தொல். பொ. 144, 19 இளம்.).3. கருது

4

74

அளவுகூடை

5.

தல். ஒண்கதிர் ஞாயிறு ஊறு அளவாத் திரிதரும் செங்கால் அன்னத்துச் சேவல் (மதுரைக். 385). 4. இயைதல். களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து அளவியது (கம்பரா. 4, 9,96). பொருந்தஇருத்தல். சென்றோங்கி விண் அளவும் தீ யானானை தேவா. 6, 11, 2). வம்பு அளவு கொங்கையொடு (கம்பரா. 2, 5, 14). 6. அளவிடுதல். ஆய்ந்து அளவா ஓசை அறையூஉப் பறையறையப் போந்தது வையைப் புனல் (பரிபா. 10, 7). 7. தடவு தல். இளமென் கால் பூ அளவியது எய்த (கம்பரா.

2, 8, 2).

அளவு + வி. அ.

ஒன்றன் எல்லைவரை, ஒன்று நிகழு மட்டும். புனல் ... கடல்புகும் அளவு அளவு (பரிபா. திர. 2, 66). முகம் காணும் அளவு (குறள். 224). பூணா கம்நேர்வு அளவும் போகாது (திணைமாலை. 16). வேழம் வருமளவும் வெயிலே துற்றித் திரிவாரும் (தேவா. 1, 45, 11). அரவணையான் குழல் ஊத அமரலோகத்தளவும் சென் றிசைப்ப (பெரியாழ். தி. 3, 6, 7). அறிவில் சாதி தாழ்வினை விலக்கும் சார்பு தலைப்படா அளவும் என்றான் (சூளா. 199). பொன்கயிலை வெற்பளவும் (நக்கீர. கயிலை. 75). திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திற மினோ (கலிங். 69). யான் வந்து காண்பளவும் (சங்கர. கோவை 50).

அளவு' இ. சொ. தொடங்கி, முதல்.

அன்றளவு

000

இன்றுகா றமுதம் ஈந்து (கோனேரி. உபதேசகா. 10,

347).

அளவுக்கல் பெ. நீர் வரத்துள்ள இடங்களில் நீரேற்ற அளவினைக் காட்டும் கல். (தெ.இ.க. 1,130)

அளவுக்கொத்து பெ. அளக்கிறவனுக்குக் கூலியாகக் கொடுக்கும் நெல். (தொ. வ.)

அளவுகருவி பெ. பெ. எடுத்தல் எடுத்தல் முதலிய அளவுகள் ஒவ் வொன்றையும் அளப்பதற்கான கருவி. (பே.வ.)

அளவுகாட்டி பெ. அளவு தெரிவிக்கும் கருவி ஆட்சி.

அக.)

அளவுகாரன் பெ. நெல் முதலியவற்றை அளப்பவன்.

(ராட். அக.)

அளவுகூடை பெ. தானியம் அளப்பதற்கான குறித்த அளவுள்ள கூடை. (நாட். வ.)