உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்கரா

அற்கரா பெ. பேய் இலுப்பை. (சாம்ப. அக.)

அற்கள் பெ. இரவின் தொகுதி. அற்கள் நிறத்த அரக்கர் (கம்பரா. 6,14,22).

ஓடும்

அற்களம்1 பெ. கதவின் தாழ். (நாநார்த்த. 1059)

அற்களம் 2 பெ. பெரிய அலை. (முன்.)

அற்களம் 3 பெ. பேரவை. (த. த. அக.)

அற்கன் பெ. சூரியன். அற்கன் மேல் வரும் எழிலி களென அடைந்தனவே (கந்தபு. 3, 7,35).

அற்காமை பெ. 1. நிலையாமை. அற்காமை என் பது நிலையாமையின் பேர் (அக. நி. அம்முதல். 54). 2. அறிவின்மை. அற்காமை அறிவின்மைய தற் கும் கூறும் (அரும்.நி.655)

அற்காலம் பெ. வறுமையான (தீய) காலம். அற் காலம் என்னும் கூற்றைத் தவிர்த்தருள் (சிலப். அடியார்க். உரைச் சிறப்புப்.3).

அற்காறொட்டகம் பெ. அஞ்சற் கடிதங்களைச் சுமந்து செல்லும் ஒட்டகம். (செ.ப. அக. அனு.)

அற்கி பெ. ஓரிலைத்தாமரை. (இராசவைத்./செ.ப. அக.) அற்கு -தல் (அல்கு 1 - தல்) 5 வி. நிலைத்தல். அற்குப ஆங்கேசெயல் (குறள். 333).

அற்கெந்தி பெ. அர்த்த சந்திரன் என்னும் யோகத் தானம். சாந்தியாதீதம் அற்கெந்தி (தத்து. பிர.156)

அற்சிரம் (அச்சிரம்) பெ. (வாடை கூடிய) முன்பனிக் காலம். அற்சிரம் மறக்குநர் அல்லர் (ஐங்.464). வாடை தூக்கும் வருபனி அற்சிரம் (அகநா.78,10). கடும் பனி அற்சிரம் (குறுந். 76). மாரிநின்ற மையல் அற்சிரம் அமர்ந்தனள் என்னள் கொல் (நற்.

312, 5-9).

...

அற்சிரை பெ. முன்பனிக்காலம். அற்சிரை வெய்ய வெப்பத் தண்ணீர் (குறுந். 277 பா.பே.).

அற்பக்கியன் பெ. சிற்றறிவுடையவன். அற்பக்கியனா கிய சீவற்கு அணுகுந்தோடம் (சூத. எக்கிய. உத்தர,

சூத. 3, 8),

482

அற்பபதுமம்

அற்பகதம் (அற்பகன்) பெ. வாழை. (பச்சிலை. அக.) அற்பகந்தம் (அற்பகெநதம்) பெ.

(த.த. அக.)

செந்தாமரை.

அற்பகன் (அற்பகம் ) பெ. வாழை. (த. த. அக.)

அற்பகாந்தம் பெ. காட்டெள். (மர இன. தொ.)

அற்பகெந்தம் (அற்பகந்தம்) பெ. செந்தாமரை. (வைத். விரி . அக, ப. 24)

அற்பகேசி பெ. வசம்பு. ( வைத். விரி. அக. ப. 11)

அற்பகை பெ. (அல் + பகை) (இருளின் பகையாகும்) கதிரவன். அரைக் கணத்து அலை அற்பகை முன் பனி மானும் (கல்வளையந். 15).

அற்பகைமரம் பெ. அகத்தி. (மரஇன. தொ.)

அற்பச்சிறுநீர்ப்பெருக்கி

பெ. சிறுநீரைச்

அதிகப்படுத்தும் மருந்து. (குண. ப. 1)

சிறிதளவு

அற்பசங்கை பெ. சிறுநீர் கழிக்கை. (அந்.வ.)

அற்பசி' (ஐப்பசி) பெ. ஆண்டில் ஏழாம் திங்களின் பெயர். அற்பசி என்பது ஐப்பசி மாதமும் (அக.நி.

அம்முதல். 114).

அற்பசி' பெ. ஒரு விண்மீன். (முன்.)

அற்பசுருதிவாக்கியம் பெ. வேதத்துள் கன்ம காண்டம்.

(கட்டளைக்.100)

அற்பசொற்பம் பெ. சிறிதளவு, மிகக்குறைவு. அந்தத் தொகையில் அற்ப சொற்பமும் மிஞ்சவில்லை (பே.வ.).

அற்பணம் பெ. உரிமையாக்குகை. கண்ணனுக்கு அற் பணம் (பிரபோத. பாயி. 12).

அற்பத்தனம் பெ. இழிகுணம். தனத்தினைச் சுமப்பது அற்பத்தனம் (தமிழரசிக் குற. 28). பணத்தில் அவன் அற்பத்தனத்தைக் காட்டிவிட்டான் (பே. வ).

அற்பதுமம் பெ. செந்தாமரை. (வைத். விரி. அக. ப. 11)

அற்பதேதம் பெ. வாளை. (வாகட அக.)

அற்பபத்திரம்! பெ. துளசி. (வைத். விரி. அக.ப.11) அற்பபத்திரம் 2 பெ. திருநீற்றுப் பச்சை. (சங். அக.) அற்பபதுமம் பெ. செந்தாமரை. (த. த. அக.)