உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறு-த்தல்

அறு - த்தல் 11 வி. 1. வரம்பு கட்டுதல். நீதியால் அறுத்து அந்நிதியீட்டுதல்...பெட்டதே (சீவக. 1920). ஆசையை அளவறுத்தார் இங்கு ஆரே (புருடோத். திருவிசை. 1,10). கையதனால் ஒத்தறுத்துப் பாடு தலும் (பெரியபு.28,103).2 முடிவு செய்தல். முத் தழற் குடையோன் முக்கட் கடவுளென்று அறுத் திடும் 3. பங்கிட்டுக் வழக்கு (கல்லாடம் 59, 13). கொடுத்தல். அற்றார்க் கறாது வதிந்தோரும் (பிரமோத். 16,37). 4. செங்கல் வடிவாக்கல். அடுத்த ஊரில் செங்கல் அறுத்துச் சூளை போடுவார்கள்

(பே.வ.).

அறு10 பெ. (யாப்.) இடைவிடுதல். அகைப்பு வண் ணம் அறுத்தறுத் தொழுகும் (தொல். பொ. 530 இளம்.).

அறு 11 பெ. அ.

ஆறு என்னும் எண் அடைமொழியாக வருங்கால் பெறும் வடிவம். அறுநூறு (பே.வ.).

அறுக்கணக்கு பெ. சரக்கறை இருப்புக் கணக்கு. (வட்

வ.)

அறுக்கப்பொறுக்க வி. அ. வி. அ. உழவுமுதல் அறுவடைவரை ஊக்கமாக. அறுக்கப்பொறுக்கப்பாடுபட்டும் படுக் கப்பாயில்லை (பழமொழி).

அறுக்கரிவாள் பெ. கருக்கரிவாள். (வட்.வ.)

அறுக்கன் பெ. 1. தலைவன். (செ. ப. அக. அனு.) 2. நெருங்கிய நண்பன். (முன்.)

அறுகடி பெ. அறுகு என்னும் புல் மண்டிய நிலம். (சங். அக.)

அறுகம்புல் பெ. பூசைக்குரிய புல்வகை. அறுகம்புல் லுச் சுங்குக்காரி (மலைய. ப. 15).

அறுகரிசி பெ. அறுகம்புல்லோடு கூடிய மங்கல அரிசி. சென்னி திருத்தமுறும் அறுகரிசி இட்டு (ஆனைக் காப்பு. கோச்செங். 93).

அறுகாமணை

பெ.

காய்கறி நறுக்க உதவும் வாள்

பொருத்திய மணை. (கோவை வ.)

அறுகால்1 பெ. ஆறுகால்களுள்ள வண்டு. அறுகால் உழுகின்ற பூமுடி (திருவாச. 6, 5). 5). அறுகானிறை

5

503

அறுகு 1

மலர் (திருக்கோ. 126). அறுகால் சேர் தாமஞ் சரி குழலாடு அன்னைக் கரத்தணைத்து (மதுரைச். உலா

226).

அறுகால்2

(அறுகாலன்) பெ. (காலற்ற) பாம்பு. அறுகால் பீடத்து உயர்மால் ஆழி கடைந்து அமு தையரங்கேற்றுமாபோல் (திருவிளை. பு. பாயி.1).

அறுகால்வண்டு பெ. கருவண்டு. (சாம்ப. அக.)

அறுகாலன் (அறுகால்') பெ. (காலற்ற) பாம்பு. அறுகாலன் நஞ்சு அமர்கண்டரை (மருதூரந். 6).

அறுகாலி பெ. (உயிரியல்)

பூச்சி. (நாட்.வ.)

ஆறுகால்களையுடைய

அறுகாழி பெ. மோதிரவகை. கையும் அறுகாழியும் ஆனவடிவை (திருவாய். 8,10,6ஈடு).

அறுகாற்பறவை பெ. பெ. வண்டு. அறுகாற் பறவை அள வில் மொய்த்தலின் (நற். 55, 5). நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை (புறநா. 70, 11). அறுகாற் பறவை யலர் தேர்ந்துழலும் (திருமந். 1497). ஈசர் முன்னே அறுகாற்பறவை செல்லலாமோ

(பத்ம. தென்றல். தூது 112).

அறுகாற்பீடம் பெ. சைவசமயக் கோயில்களில் காணப் படும் ஆறுகால்கள் கொண்ட ஓர் இருக்கை மண்டபம். அறுகாற்பீடத் திருந்து அரங்கேற்றினானே (திருவிளை. பு. பாயி. 1).

...

அறுகிடு-தல் 6வி. 6 வி. திருமணத்தில் அறுகம்புல்லையும் பச்சரிசியையும் மணமக்கள் தலையில் இட்டு வாழ்த்து தல். மங்கைக்கறுகிட வந்து நின்றார் மணப்பந்தரி லே (தமிழ்நா.50). சேர அறுகிட்டார் தேர் வேந்தர்

(பாரிகாதை 723).

அறுகிலிப்பூடு பெ. பூடுவகை. (செ.ப.அக . அனு.)

அறுகீரை (அரைக்கீரை. அறைக்கீரை 1 ) பெ. கீரை வகை. அறுகீரையைத் தின்றறி (பதார்த்த. 625).

அறுகு1 (அறுகை 1) பெ. இந்து சமய வழிபாட்டிலும் விழாக்களிலும் பயன்படும் கொடிபோல் படரும் ஒரு வகைப் புல். அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி (சிலப். 6,124). தாளி அறுகு ஆம் உவந்த தார்