உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றாடம்

அன்றாடம் (அன்றாடகம்) வி. அ. நாள்தோறும். அன் றாட உணவை அளித்தருளும்

6, 11).

...

(விவிலி. மத்தேயு

அன்றாடம் காய்ச்சி பெ. (நிலைத்த வருமானமின்றி) அன்றன்று சம்பாதித்ததைக் கொண்டு (வறுமையெல் லையில்) வாழ்பவன். குறைந்த வருமானமுடைய வர்களும் அன்றாடம் காய்ச்சிகளும் (பொருளியல்

12 ப. 32).

...

அன்றாடு வி. அ. அன்றன்று, நாள்தோறும். கைமேலே இலக்கைப் பெறாதார்க்கு அன்றாடு படிவிட வேணுமிறே (திருவாய். 4, 8, 7 ஈடு). அன்றாடு .. அளந்துவிடுவான் (மலைய. ப.168).

...

அன்றாடுகாசு பெ. அப்போதுபுழக்கத்திலுள்ள காசு. இவன் பக்கல் உபையங்கொண்ட அன்றாடு (நற்) (தெ.இ.க.17, 165).

காசு

அன்றாடுபொன் பெ. (முற்காலத்தில்) புழக்கத்தில் இருந்த பொன்காசு. விற்றுக்கொடுத்து(க்)கொண்ட அன்றாடு (நற்) பொன் (முன். 17, 608).

அன்றாள்கோ பெ. அப்பொழுது ஆளும் அரசன். முட்டில் அன்றாள்கோவுக்கு நிசதி குன்றி பொன்மன்ற ஒட்டிக் கொடுத்தேன் (முன்.1 ப. 115).

அன்றி இணை. இ. சொ. 1. அல்லாது, மட்டும் அல்லா மல். தாம் சொல்லிய பொய் அன்றி மீளிவேல் தானையர் புகுதந்தார் (கலித். 31, 23-24). அறம் புரி மாந்தர் அன்றிச் சேராப் புறஞ்சிறை மூதூர் புக்கனர் (சிலப். 13,195).திருவருளால் அன்றிக் காப்பு அரிதால் (நம். திருவிருத். 62). தரணி பெறு மாறன்றி என் மா மகனைக் கான் ஏகு என்றாள் (கம்பரா. 2,4,71). வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே (பாரதி. தேசியம். 1,1). நின்னை அன்றி வேறு எண்ணார்க்கமுதமே (வேதாந்த. சத. 45). 2.தவிர, நீங்கலாக, ஒழிய. தான் என் பெயரும் ... வினாவின் பெயரும் அன்றி அனைத்தும் விளிகோள் இலவே (தொல்.சொல். 137 சேனா.). கழி சூழ் கானல் ஆடியது அன்றிக் கரந்து நாம் செய்தது ஒன்றில்லை (நற். 27, 4-5). நின் அன்றி மற்றிலேன் கண்டாய் (இயற். பெரியதிருவந். 77). ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே (தேவா. 599, 4). 3. அல்லாமலும், மேலும். மண் ணவர்க்கும் அன்றி ... விண்ணவர்க்கும் மேலாய் விடும் (ஏலாதி 2). அது அன்றிப் புகழ்வேண்டிச்

518

அன்றில் 1

சாவவும் பெறும் (இறை. அக. 1 உரை). அவயமும் அளிக்கும் அன்றி ... நோய்க்கு மருந்துமாம் (கம்பரா. 6, 15, 139). தடம்பொழில்கள் அன்றி ஏழ் பொழிலையும் (மீனா. பிள். 56). 4. இல்லாமல்,

இன்றி. காதலனுடன்

அன்றியே மாதவி தன் மனைபுக்காள் (சிலப். 7, 52, 10). இவறியான் செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும் (குறள். 437). அருந்திரவியம்

காக்கைக்கேதனத்தாள்

திரு அன்றியில் (திருவரங். அந். 96).

அன்றிக்கே வி. அ. அன்றி, அல்லாமல்.

...

தருமோ

அங்ஙனன்

றிக்கே இதுவே வாசகம் என்று தலைக்கட்டு கையாலே (திருவாய். ப.177 ஈடு, முதல்பிர.).

அன்றியனைத்தும் பெ. அவையெல்லாம்.

மந்திரப்

பொருள் வயின் ஆஅகுநவும் அன்றியனைத்தும் கடப்பாடிலவே (தொல். சொல். 449 சேனா.).

அன்றியில் வி. அ. அல்லாமல். விவேகிக்கு ஓர் உபாதி யன்றியில் (சி. சி. 4, 8 சிவாக்.).

...

அன்றியும் வி.அ. 1. அல்லாமலும், மேலும். எல்லா ரும் உவப்பது அன்றியும் நல்லாற்றுப் படூஉம் நெறியுமாரதுவே (புறநா. 195, 8-9). காண்தொறும் கலுழ்தல் அன்றியும் (நற்.23, 5). காலம்அன்றியும் மரம் பயன் கொடுத்தலின் (மலைபடு. 134). உயிரை மீட்டான் அன்றியும் மாமெய் தீண்டி அளித் தனன் (சீவக. 1342). 2.தவிரவும். காவிரி அன்றி யும் பூவிரி புனல் ஒரு மூன்றுடன் கூடிய கூடல் (பதிற்றுப். 50,6). அரும்பெறன் மரபின் மண்டபம் அன்றியும் கடைமுக வாயிலும் (சிலப். 5, 110). வேதம் நான்கும் ஓதினாய் அதுவன்றியும் புள்ளின் வாய் பிளந்து (திருமழிசை. திருச்சந்த. 19).

...

அன்றியுரை-த்தல் 11 வி. மாறுபட்டுச் சொல்லுதல். ஆசை பல அறுக்ககில்லேன் ஆரையும் அன்றி யுரைப்பேன் (தேவா. 7, 73,10).

அன்றில் 1 பெ. இணைபிரியா வாழ்விற்கு எடுத்துக் காட்டான பறவை, கிரவுஞ்சப்புள். ஒன்றில் காலை அன்றில் போலப் புலம்பு கொண்டு உறையும் புன் கண் வாழ்க்கை (நற். 124, 1-2). இன்துணை அன்றில் (கலித். 131,28). அன்றிற் பேடை அரிக்குரல் அழைஇ (மணிமே. 5. 127). புணர் பிரியா அன்றிலும்போல் (நாலடி. 376). அன்றிலம் பேடை போல் வாய்திறந் தரற்றலுற்றாள் (கம்பரா. 6, 16, 36). துணை அன் றில் வாயலகு வாங்கி (குலோத். உலா 270). அன்றிலம்