உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னியபாவம்

அன்னியபாவம் பெ. வேறாயிருக்கை.

அனு.)

(செ.ப.அக.

அன்னியபிருதம் பெ. குயில். (யாழ். அக.அனு.)

அன்னியபுட்டம் பெ. (வேறு பறவையால் வளர்க்கப் படுவதான) குயில். 'யாழ். அக.)

அன்னிய

அன்னியம்' (அந்நியம்) பெ. 1. தனியானது. அன் னியம் இன்மையின் அரன்கழல் செலுமே (சி. போ. 8, 3). 2. வேறானது. அன்னியமானவை உணர்த்தி (சிவப்பிர. 36). இத்தேகத்தின் இதற்கு மாய் ஒரு சீவன் உண்டு (கொலைமறு. 6 உரை). இப்போது அன்னியம் ஆகிய வரத்தைக்கேண்மின் கள் (ஞான. உபதேசகா. 2032).3. வேறுபாடு. அன் னியம் யாவும் அகன்றுவிடு (திருக்காளத். பு. 28, 47). அன்னியம் இல்லாமல் அமலன் அருள் ஆகமம் (அருணகிரிபு. 1, 12). 4. (தனக்கு/தன் நாட்டிற்குப்) புறம்பாக உள்ளது. அன்னியநாமத்தால் கொண்ட நிலங்கள் (தெ.இ.க. 23,393). அன்னியமாக நம் முள் எண்ணுவதில்லை (பாரதி. கண்ணன். 19,2).

அன்னியம்' (அந்நியம்) பெ. அன்னியபுட்டம், குயில். (யாழ். அக.)

அன்னியம்' (அந்நியம்) பெ. ஆயிரங்கோடி என்பதைக் குறிக்கும் சொல். (கையேடு. ப. 275)

அன்னியமுட்டு-தல்

(நாஞ்.வ.)

5 வி.

சந்ததியற்றுப்

போதல்.

அன்னியன் (அந்நியன்) பெ. 1. பிறன். அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேனா னால் (பெரியபு. திருநகரச்சி. 37). உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே தெரிந்தனம் பாரதி. தனிப். 8, 14-15). அன்னியர் பொருளை அபகரிப் பதிலும் (நாஞ். மரு. LOIT GOT. 6, 58). 2. வேறுபட்ட வன். அன்னியனாம் எறிதிகிரிப் படையோன் (ஞான. உபதேசகா. 2031). 3. புதியவன், வெளிநாட்டவன். அரசர்கள்... தீர்வை...யாரிடம் வாங்குகின்றனர்... அன்னியரிடமா (விவிலி. மத்தேயு 17, 25). வெற்றி கொண்டிலங்கிய மென்மையார் பாரத நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப (பாரதி. தனிப்.20, 4-5). 4. பகைவன். விழையும் அன்னியர் ஓர் கண துற்றே வென்றழிக்கும் விதி அறியாயோ (பாரதி. பாஞ்சாலி. 100). ஆங்காரம் ஒடுங்காநின்ற அன்னியனைத்தன்மையதாய் ஆள்வது (அந்தோனி. அண். 4). 5. ஈனர். (கதிரை. அக.)

த்

52

3

அன்னுராவி

அன்னியாபதேசம் பெ. வெளிப்படையான பொருள. (செ.ப.அக. அனு.)

அன்னியாயக்காரன் பெ. குற்றம் சாட்டுபவன், வாதி. (நாஞ்.வ.)

அன்னியாயகாரி (அந்நியாயகாரி) பெ. தீங்கு செய்த வன். ஒட்டருடனே கூடிநின்று அன்னியாயகாரி களாய்ப் போந்த இவர்கள் (தெ.இ.க. 24,192).

பெ.

அன்னியாயம் (அநியாயம்', அன்யாயம், அனியாயம்) 1. முறைகேடு. என்னை அன்னியாயத்தாலே எரிவித்த சாபம் (உத்திர. இலவண. 16). 2. குற்றச்சாட்டு, வழக்கு. (நாஞ்.வ.)

அன்னியோன்னியம் (அந்நியோன்னியம்) பெ. (ஒரு வருக்கொருவர் உதவியாக இருக்கும்) நெருக்கம், கூட்டுறவு. துட்டர்களுடனே அன்னியோன்னியம் (சர்வ.கீர்த். 68,2). அவர்களுக்குள் அப்படி ஓர் அன்னியோன்னியம் (பே.வ.).

அன்னியோன்னியாச்சிரயம் பெ. ஒன்றையொன்று சார்ந் திருக்கும் குற்றம். (செ. ப. அக.)

அன்னியோன்னியாபாவம் பெ. ஒன்றில் ஒன்று இன்மை. அன்னியோன்னியாபாவம் அத்யந்தாபாவம் (பிர

போத. 42, 4).

அன்னியோன்னியாலங்காரம் பெ. (அணி.) ஒன்று மற் றொன்றிற்கு உதவியாக இருப்பதாகக் கூறும் பொருள் வகை அணி. (அணி. 43)

அன்னிலா பெ. 1. சீத்தா. (சாம்ப. அக.) 2. 2. அணி நுணா. (முன்.)

அன்னீதம் பெ. அநீதி. நந்தனார் அன்னீதம் செய் யேன் என்றார் (நந்த, கீர்த், ப. 72). இதுவென்ன அன்னீதம் என்னிடத்தில் நீர் படுத்தீர் (காத்தவரா.

ப.120).

அன்னீயம் பெ. கரும்பு. (சாம்ப. அக.)

அன்னுகம் 1 பெ. பேய்ப்பசலை, மயக்கத்தையுண்டு

பண்ணும் ஒருவகைக்கொடி. (செ.சொ. பேரக.)

அன்னுகம்' பெ. பேய்ப்பருத்தி. (சாம்ப. அக.)

அன்னுராவி பெ. அப்பாவி. (செ. ப.அக. அனு.)