உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனன்னியகதி

அனன்னியகதி பெ. வேறு கதியற்றவன். ஐயோ இவன் அனன்னியகதி (திருவாய். 9,8,7 ஈடு).

அனன்னியசன் பெ. மன்மதன். (கதிரை. அக.)

அனன்னியம்

1.

பெ. (அனனியம்) வேறன்மை. கடத்தொடு மட்குஅனன்னியம் (வேதா.சூ. 127). 2. பிரிப்பற்ற தன்மை. அனன்னியமாய் நிறைந்த அறிவறி யாமையினாலும் (சிவப்பிர. 36).

அனன்னியன் பெ. தான் அடைந்த புகலிடத்தைத் தவிர வேறு நிலையைத் தேடாதவன். நொந்தவரே முத லாகத்தொடங்கி அனன்னியராய் (தேசிகப். 17, 17).

அனன்னியார்கம் பெ. வேறொருவரும் உரிமை கொண் டாடாமலிருப்பது. நம்மைத் தன் அழகைக் காட்டி அனன்னியார்கம் ஆக்கிக்கொண்ட (திருவாய். 6,1,1,

பன்னீ.).

அனன்னுவயம் பெ.

(எங்கெல்லாம் புகையுண்டோ அங்கெல்லாம் நெருப்புண்டு என்னும்) தொடர்பை விளக்கிக்காட்டாமல் (அடுப்பங்கரையில் புகைபோல என்னும) எடுத்துக்காட்டு மட்டும் காட்டி (மலையில் நெருப்புண்டு எனப்) பொருளைத் துணியும் திட்டாந் தப்போலி. அனன்னுவயமாவது சாதன சாத்தியந் தம்மிற் கூட்ட மாத்திரஞ் சொல்லாதே இரண்ட னுடைய உண்மையைக் காட்டுதல் (மணிமே. 29, 385-387).

அனன்னுவயாலங்காரம் பெ. (அணி.) வேறொன்றுடன் உவமிக்காது (தனக்கு இணை மற்றொன் றில்லை மற்றொன்றில்லை என்பது தோன்ற) தன்னோடே உவமிக்கப்படுவதான அணி, இயைபின்மையணி. (அணி. 2)

அனனிய பாவனை பெ. அத்துவித பாவனை. அனனிய பாவனையால் சிவனே நான் என விளங்கும் (சருவஞா. 15).

...

அனனியம் (அனன்னியம்) பெ. வேறன்மை. அனனியம் பெற்று அற்று ஒருபற்றும் ... சித்தர் (திருப்பு. 472).

அனனிலம் பெ. (ஞாயிற்றின் வெம்மை நிறைந்த) பாலைநிலம். (செ. ப. அக.)

அனனுபாடணம்

(அந்நுபாடணம்) பெ.

(தருக்கம்)

பிறர் கூறிய கூற்றைப் பின்பற்றி ஒன்றும் கூறாது

வாளாவிருக்கை, (சி. சி. அளவை. 14 மறைஞா.)

5

40

அனாசாரம்

தோற்றுவித்த

அனாகதசிவன் பெ. சதாசிவத்தைத்

பரசிவ வடிவம்.(சங். அக.)

அனாகதநாதம் பெ. பராசக்தி. (சி. சி 4, 34, சிவாக்.சங். அக.)

அனாகதம் 1 பெ, நிகழாதது, நேரிடாதது. அதீத அனாகதம் 'ஞானா. 28,15).

அனாகதம்' பெ. அறிவுக்கு அப்பாற்பட்டது. (சங். அக.) அனாகதம்' பெ. எதிர்காலம். (கதிரை. அக )

அனாகதம் + பெ. (இசை) தாளம் முன்னும் குரல் பின்னுமாகவரும் அனாகதவெடுப்பு. தாள முன் குரல் பின்வருவ தநாகதம் (பரத. 3, 44).

அனாகதம்5 பெ.

சூக்கும உடலில் ஆறாதாரங்களுள் ஒன்றாய் மணிபூரகத்திற்கு மேலுள்ள, பன்னிரு இதழ்த் தாமரை வடிவில் அமைந்துள்ளதாய்க் கருதப்படும் சக்கரம். அனாகத உருத்திர வண்ணம் (போகர் 700 கடவுள்).

அனாகதவெடுப்பு பெ. (இசை) தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக வரும் எடுப்பு வகை. (செ.ப. அக.)

அனாகாலம் பெ. பஞ்சகாலம். (கதிரை. அக.)

அனாகுலன் பெ.

கவலையற்றவன், கலக்கமற்றவன். ஐம்புலம் அசேதனம் அறிவன் அனாகுலன் (ஞானா.

17, 20).

அனாசக்தி பெ. பற்றின்மை. (செ.ப.க .அனு.)

அனாசக்தியோகம் பெ. 1. பற்றின்றிக் கடனாற்றுகை. (சமய வ.) 2. தமது கீதை விளக்க நூலுக்குக் காந்தி யடிகள் இட்ட நூற்பெயர். (நூ.பெ.)

அனாசத்தன் பெ. பற்றில்லாதவன், விருப்பமில்லாத

வன். (சங். அக.)

...

அனாசாரம் பெ. 1. முறையிலாச் செயல். அடியார் செய்த அனாசாரம் பொறுத்தருளி சீறாத பெரு மானை (தேவா. 6,80,5). அடியேன் நான் செய்த அனாசாரம் எல்லாம் பொடியாமே கோவே பொறு (பாரதவெண். 660). 2. ஒழுக்கமின்மை. அனாசார கருமயோகி ஆகாமல் (திருப்பு. 21). அனாசாரத்தில் தோய்ந்து ஒன்றும் இல்லை என்றே சொல்லும் மூடன் (அரங்க. பாரதம் 11). 3. இல்லறத்தாருக்கும்