உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைசுவரியம்

ஆறும் அனைகாந்திகம் எனப்படும் (அனுமான வி.ப. 27). 2. பலமுடிபுடையது. (தருக்கசங்.ப.289)

அனைசுவரியம் பெ. வறுமை. (கதிரை. அக.)

அ எத்தாண்டை பெ. ஆண்டு முழுமை. கரம்பு திருத்தி...பயிர் செய்த நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அனைத்தாண்டைக்கும் பசானம் பயிர் செய்த நிலதுக்கு (தெ.இ.க. 8, 72).

அனைத்

அனைத்து1 கு. வி. 1. அத்தன்மையுடையது. தால் கொண்க எம் இடையே நினைப்பின் (நற். 395,3). அனைத்தாகப் புக்கீமோ (கலித். 78, 24), 2. ஒத்தது. தாரகை மேருப்புடைவரு சூழல் நாடுநகரம் அடைய அடைந்தனைத்தே (பரிபா. 19.

27).

...

அனைத்து வி.அ. அவ்வளவு. அனைத்து அறன் (குறள். 34 அவ்வளவே அறம் ஆவது-பரிமே ).

அனைத்து' பெ. அ. எல்லாம். அனைத்துலகில் இறப் பும் நீ (நந்திக்கலம். கடவுள்.). அனைத்துயிர்க்கும்

அருள் தாங்கி (பெரியபு. 21, 34).

அனைத்து * பெ. அது. ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு (குறுந். 217 அவ்வாறு யான் சொன்ன அதற்கு-உரை). இமைப்பிற் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் (குறள். 1129 அவரை நமக்கு ஏதிலர் என்று சொல்லும் இவ்வூர் அதற்காக இமைக்கிலன்- மணக்).

அனைத்துக் பெ. எல்லாம், எல்லாப்பொருள்களும், முழுவதும். அனைத்தும் பெயர்ப் பயனிலையே (தொல். சொல். 66 சேனா.). நிலம் தினக்கிடந்த நிதியமோடு அனைத்தும் (மலைபடு. 575). நனந் தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார் புணர்ந்து டன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும் (மது ரைக். 322-323). அனைத்தும் நீ அனைத்தின் உட் பொருளும் நீ (பரிபா. 3, 68). இவை அனைத்து டன் (சிலப். பதிகம் 83). ஏனைப் பிறந்த இவ்வனைத்தும் (ஆசாரக். 43). உலகனைத்தும் கற் பொடி காண் (திருவாச. 12, 3). ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் (கம்பரா. 6, 4, 140). விளங்குகின்ற கலை யனைத்தும் (ஏரெழு.11). உலகினுயிர் அனைத்தும் புரக்கும் அருமருந்தே (திருமலை முரு. பிள். 24). அண்டபகிரண்டமுமாய்

நாள்


63

அனையன்

அனைத்தும் ஆகி (இராமநா. 1, 1). அன்பன் வார்த்தை அனைத்தையும் செவிமடுத்து (குசே. 731). உயிர் அனைத்தும் படைத்திடும் ஒருத்தன் செங்கோட்டு. பிள். 1, 4).

அனைத்துண்ணி பெ. கண்டதைப் புசிக்கும் உயிர். (அறிவி. க. சொ.)

அனைத்துலகதேசியம்

பெ. யாதும் ஊரே என்னும் ஒற்றுமையுணர்வு. அனைத்துலகதேசியம் என்பது ஒரு சகோதர உணர்வைக் குறிப்பிடுகிறது (அரசியல்

11 u. 45).

அனைய கு. வி. அத்தன்மையது, அவ்வளவினது. வெள்ளத்தனைய மலர்நீட்டம் (குறள். 595).

அனைய

வி.

அ. அத்தன்மைய. அயில் உறுப்பு அனைய ஆகி (சிறுபாண். 7). குன்றி அனைய செயின் (குறள். 965).

அனைய 3 பெ. அ. பெ. அ. (முன்னர் ஒன்றின் தன்மையாக எதுவும் கூறப்படாதபோது) அந்த. இனைய மண்ணுள்ளோர் அனைய விண்ணுள்ளோர் (கலிங்.

349).

அனைய பெ. அ. அத்தகைய, அனைய நான் பாடேன் (திருவாச. 5,22). அனைய தன்மையள் ஆகிய கேகய அன்னம் (கம்பரா. 2, 2, 87).

அனைய இ. சொ. ஓர் உவம உருபு, ஒத்த. மின்னின் அனைய வேல் ஏந்தி (கைந்.10). குன்றனைய குற் றம் செயினும் (இயற். முதல் திருவந். 4 1). வடமலை யனைய நன்மாடக் கோயிலே (தேவா.3,18,10). சேல் அனைய கண்ணார் (திருவாச. 25,10); பாக்கி யம் அனைய நின் பழிப்பில் மேனி (கம்பரா. 5, 5, 60). செம்மலர்மேல் திருஅனைய திலகவதியார் (பெரியபு. 21, 31).

அனையம் கு.வி. அத்தன்மை உடையோம் (அனை என்னும் குறிப்பு வினையடியாகப் பிறந்த

தன்மைப் பன்மை முற்று). தான் மணந்து அனையம் என விடுகம் தூதே (குறுந். 106).

அனையம்' பெ. பல. அனையந்தடவை சொல்லி யாச்சு (திருநெல்.வ.).

அனையன் பெ. 1. அத்தன்மையன். துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் அனையன் என்னாது அந்தக்