பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ () பெருந்தகை மு. வ.

என் வணக்கத்திற்குரிய ஆசிரியப் பெருந்தகை உயிரோடு இத் திருவிடத்தில் உலவிய காலத்திலேயே அவர் வாழ்க்கை வரலாற்றினை வடிக்க வேண்டுமென்று எண்ணினேன். ஆளுல், அடக்கத்திற்கு இருப்பிடமான அவர்கள், கரை புரண்டோடும் பேராற்றின் சின்னஞ்சிறு நீர்த் திவலை போன்றதே தம் வாழ்வு எனக் கூறித் தம் வாழ்க்கை வரலாற்றினை எழுதவேண்டா என மறுத்து வந்தனர்.

1961ஆம் ஆண்டில் அவர்கள் பச்சையப்பர் கல்லூரிப் பணியினை விடுத்துச் சென்னைப் பல்கலைக் கழகப் பணியினை மேற்கொண்டு சென்றபோது அருமைப் பேராசிரியர் அ. மு. பரம சிவானந்தம் அவர்கள் கட்டளைப்படி, பச்சையப்பர் கல்லூரி மலரில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற தலைப்பில் அவர் தம் வாழ்க்கை வரலாற்றினைச் சுருக்கமாக ஒருவாறு எழுதி யிருந்தேன். அதனே அவர்கள் படித்துப் பார்த்தார்களோ இல்லையோ யானறியேன்.

நில்லாமையினையே நிலையாகவுடைய இவ்வுலகியல்பினைக் காட்டி, மன்னவுலகத்து மன்னுதல் வேண்டித் தம் புகழ் நிறுவித் தலைசாய்ந்த தமிழ்த்தாயின் தலைமகளுர் வாழ்க்கையினை யான் வடித்துத் தரவேண்டுமென்று திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் பெரியவர் தாமரைச் செல்வர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள் விரும்பினர்கள். தம் மருகரும் என் உடன்பயின்ற நண்பருமான திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்களை அனுப்பி இப் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்றார்கள். முதலில் யான் முற்றிலும் தயங்கினேன். என் வாழ்விற்கு உற்ற துணையாகவும், என்னை நெறிப்படுத்திய சான்றாேராகவும், ஒப்பற்ற வழிகாட்டி யாகவும் ஒருங்கே திகழ்ந்த அவர்கள் மறைந்து இரண்டு மூன்று நாள்களே அப்போது ஆகியிருந்தன. ஆணுல், பேராசிரியர் மு. வ. அவர்கள் குடும்பத்தினர் குறிப்பாக அவர்தம் மூத்த மகளுர் டாக்டர் அரசு இப் பணியினை என்னை ஏற்குமாறு கூறிஞர். என் துறைத் தலைவரும் எனக்கு ஆதரவு காட்டிவரும் அருந்திறற் பேராசிரியருமான செந்தமிழ் இலக்கியச் செம்மல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/10&oldid=586167" இலிருந்து மீள்விக்கப்பட்டது