பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ4 பெருந்தகை மு. வ.

‘அன்புக்காக விட்டுக்கொடுத்து இணங்கி நட. உரிமைக் காகப் போராடிக் காலங் கழிக்காதே’ என்பன போன்ற எண்ணற்ற மணிமொழிகளைக் கொண்டது தங்கைக்கு.

1950 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் மு. வ. இலங்கைச் சுற்றுலா மேற்கொண்டார். அங்கே தாம் உற்ற உணர்வினையும் பெற்ற பட்டறிவினையும் தம் முதன் மகளுர் அரசுக்குக் கடிதங் களாக எழுதினர். இக் கடித நூலே ‘யான் கண்ட இலங்கை’ என்பதாம். இதன் கண் அமைந்துள்ள கடிதங்கள் ஐந்து. மற்றைக் கடித நூல்களில் உள்ள கடிதங்களினும் விரிவானவை இக் கடிதங்கள். அன்புள்ள அரசு’ என்று தொடங்கி அன்புள்ள ‘வ எனக் கடிதங்கள் முடிகின்றன.

‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!’ என துகர்பவர் மு. வ. அவரையும் இலங்கைத் தமிழர் வாழ்வு, இயற்கை ஈர்ப்பையும் வென்று தம்மை நோக்கவைத்தது.

வெளியூர்களுக்குச் சென்றால் நான் பெரும்பாலும் கடைத் தெருவைச் சுற்றிப்பார்க்க விரும்புவதில்லை. அருவி உண்டா, ஆறு உண்டா, அழகிய கடற்கரை உண்டா, புத்தம் புதிய கட்டடங்கள் உண்டா, வியப்பான இயற்கைக் காட்சிகள் உண்டா என்றுதான் தேடுவது என் பழக்கம். ஆனல், கொழும்பு நகரம் தமிழர் வாழ்க்கைக்குப் போராடும் ஓர் இடமாக மாறிவிட்டதால் உண்மைக் காரணத்தைக் காண்பதற்காகச் சுற்றிப்பார்க்க விரும்பினேன்.’

இலங்கையைக் கண்ட மு. வ. அங்கு வாழும் எவரையும் நொந்து கொள்ளவில்லை. ஆள்வோரையும் அமைப்புகளையும் நொந்து கொள்ளவில்லை. ‘நேரில் கண்டறிந்தபின், தமிழ் நாட்டிலிருந்து இலங்கையைப் பிரித்து வைத்துள்ள கடலை நினைந்து நொந்தேன்’ “ என்று கூறுவதிலிருந்து இலங்கைச் சுற்றுலாவின் பெருமூச்சு’ அஃது என்பது புலப்படுகின்றது.

1. தங்கைக்கு பக். 13. - 2. யான் கண்ட இலங்கை பக். 48. 3. டிெ, குறிப்பு. பக். 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/106&oldid=586174" இலிருந்து மீள்விக்கப்பட்டது