பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பெருந்தகை மு. வ.

புத்தர் வாழ்ந்தார்; அவர் வாழ்நாளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் திருத்த முடிந்தது. சாக்ரடீஸ் வாழ்ந் தார்; அவருடைய வாழ்நாளில் பதியிைரக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாறுதலை விளைக்க முடிந்தது. ஏசுநாதரும் அவ் வாறே. ஆனல் வாழ்நாளிலேயே கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாறுதலை உண்டாக்கினவர் யார் அம்மா? காந்தி யடிகள். இந்தப் பெயரையும் நினைத்து தம் மனத்தையும் தொட்டுப் பார்க்கட்டும்! அவருடைய பகைவரும் அவரிடமிருந்து கற்று வளர்ந்த புதிய முறைகள் சில உண்டு என்பதை உணர்ந்து கொள்வார்களே.’

1.இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் உலகிலேயே மிகச் சிறந்த கவிஞர் தாகூர் என்பது என் எண்ணம். அவ ருடைய கீதாஞ்சலியை நூறுமுறையாவது படித்திருப்பேன்... பொதுவாகச் செல்வ வாழ்க்கையில் இருந்து கலை பிறப்பதில்லை. தாகூர் இந்த விதிக்கு விலக்கு. செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கலைஞராக உயர்ந்தவர் அவர்’ என்று பாராட்டும் மு.வ. தாகூர்க்கு எழுப்பிய நினைவு மாளிகை கவிஞர் தாகூராகும். இது 1949ஆம் ஆண்டில் வெளிவந்தது.

மு.வ. வைத் தமிழ்நாட்டுப் பெர்னட்சா என்று அழைப்ப துண்டு. திரு. வி. க. வோ இன்னும் ஒருபடி மேலே செல்கின் ருர். வரதராசனர் பேச்சிலும் எழுத்திலும் பர்னர்ட்ஷாவின் கருத்துக்கள் ஆங்காங்கே பொதுளும். அவர் பர்னர்ட்ஷா நூல் களைப் படித்துப் படித்து ஒரு ‘தமிழ் பர்னர்ட்ஷா ஆளுர் என்று கூறுதல் மிகையாகாது. பர்னர்ட்ஷாவைப் பார்க்கிலும் வரத ராசளுர் ஒரு துறையில் சிறந்து விளங்குகிறார் என்பது என் ஊகம். பர்னர்ட்ஷா பலப்பல நூல்களை எழுதி எழுதி முதுமை, எய்தியவர். இம் முதுமையில் அவர்க்கு வழங்கும் இக்கால அரக்கப்போர்க் காட்சி வாழ்க்கைக்குக் கிறிஸ்து வேண்டும்; பைபில் வேண்டும்’ என்னும் எண்ணத்தை அவரிடம் அரும்பச் செய்து வருகிறது. வரதராசனர்க்கோ அக் கருத்து இளமை

-

1. அன்னக்கு பக்.28. 2. யான் கண்ட மு.வ. திரு. இரா. மோகன். பக். 158.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/108&oldid=586176" இலிருந்து மீள்விக்கப்பட்டது