பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 107.”

அருளப்பனுக்கு மங்கை கள்ளாக இருந்தாளா? காவியமாக அமைந்தாளா? என ஆராயும் நூல் இது.

‘மங்கையின் வாழ்க்கை கள் அல்ல; அவள் கள்ளாக இருந் திருந்தால் அன்று இரவே - பிணக்கு ஏற்பட்ட அன்று இரவேஅருளப்பனை மயக்கியிருக்க மாட்டாளா? அருளப்பனும் குடி காரன் அல்லன் விலை மகள்தான் கள். அவள் காமுகனை அழிக் கிருள். கள், குடிப்பவன் வாயில் நாறி அழிகின்றது. காவியமோ படிப்பவன் வாயில் புகழ்பெற்றுச் சிறப்படைகின்றது. மங்கையின் வாழ்க்கை காவிய வாழ்க்கை.’

முருகையா ஓர் அரிய உண்மையை வெளிப்படுத்துகிறார்: ‘அருளப்பா, காதல் வாழ்க்கையில் ஒருவகைக் கண்மூடி வாழ்வு: வேண்டும். குழந்தைபோல் வாழவேண்டும்; தொடக்கத்தில் தான் ஆராய்ச்சி வேண்டும். பிறகு ஆயுள் வரைக்கும் ஆராய்ச் சியும் கூடாது. அறிவும் மிகுதியாகக் கூடாது. ஒருவர் குற்றம் ஒருவர்க்குத் தெரியாத அன்பு வாழ்வு - கண்மூடி வாழ்வு - வேண்டும்.’

LIH 60%). I

‘பாவை’ ‘லோகோபகாரி இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னே நூலாகியது. பழைய அகத்தினை மரபுகள் காலப்போக்கில் மாறி இக் கால வாழ்வில் எவ்வாறு இடம் பெற். றுள்ளன என்பதனைப் புலப்படுத்துவது பாவையாகும். கதைத் தலைவன் பழனி, ‘நான் வாழும் வாழ்வுக்கு ஒருதுணை வேண்டும்; நான் பேசும் பேச்சைக் கேட்பதற்கு ஒரு நட்பு வேண்டும்; நான் எண்ணுவதுபோல் சேர்ந்து எண்ணுவதற்கு ஒரு மனம் வேண்டும். அதனுல்தான் நான் பாவையைத் தேடுகிறேன்’ என்கிருன்.

உரிமைக்கும் கண்மூடி வழக்கத்திற்கும் நடக்கும் போராட் டத்தில் உரிமை வெற்றி கொள்வதை விளக்கும் நாவல் பாவை.

-

_ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

1, டாக்டர் மு. வ. வின் காவல்கள். திரு. இரா. மோகன் பக். 3-4. 3. கள்ளோ? காவியமோ? பக். 104.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/119&oldid=586188" இலிருந்து மீள்விக்கப்பட்டது