பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பெருந்தகை மு. வ.

கெட்டது, திரியும் கெட்டது, சிட்டமும் பிடித்தது, ஒளி மங்கியது, மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளிவிளக்கு என்றான்’ என்று சந்திரன் வாயிலாக அரிய வாழ்வு நெறியை விளக்குகிறார் மு.வ.

மு. வ. வின் இளமைக்கால நண்பன் ஒருவன் சந்திரன் போலவே வாழ்ந்து கெட்டவன். ஒருநாள் மு.வ. கல்லூரியில் இருந்து தம் வீட்டிற்குச் செல்லும்போது நடைபாதையின் எதிர்ப்பக்கத்தில் இருந்து வரதராசா வரதராசா !’ என்னும் குரல் கேட்டது. ஒரு தொழுநோயாளி தம்மை நோக்கி வரத ராசா! என்னைத் தெரியவில்லையா? மறந்து விட்டாயா?” என்று கூறுவதைக் கேட்டு அவனை அடுத்துச் சென்றார். தம் இளமை நண்பன் என்பதைக் கண்டார். வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவன் வாழ்க்கையைப் பரிவுடன் கேட்டார். உணவு படைத்துப் பணம் தந்து அனுப்பி வைத்தார்.

‘வேலு தன் வீட்டில் சந்திரனுக்கு இடங் கொடுத்துக் காப்பாற்றியதுபோல் நான் செய்யவில்லை. மாருக உணவு படைத்துப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டேன்’ என்று தம் அன்பு மாணவரிடம் இந் நிகழ்ச்சியைப் பின்னுளில் கூறினர் மு. வ.

மண்குடிசை :

மு. வ. வின் நீண்ட நெடுங் கனவிலிருந்து முளைத்தெழுந்த கதை மண்குடிசை’ ‘ஆல்ை மாறுதல் ஒன்று செய்யப்பட்டது. கனவில், நல்லது செய்து அல்லல்படும் அந்த மெய்யப்பனின் உருவம் மறைவதற்கு ஒருவரின் மந்திரம் பயன்பட்டது. ஆளுல் இங்குக் கதையில் அறிவியலே உதவுவது நல்லது என எண்ணி

மாறுதலைச் செய்தேன்’ என்கிறார் மு. வ.

‘திருத்தக் கூடியவர்களைத் திருத்தமுடியும். வீட்டினுள் மனைவியைத் திருத்தமுடியாமற் போகலாம்; தொடர்பு இல்லாத வழிப்போக்கனைத் திருத்திவிடக் கூடும்.’

1. டாக்டர் சி. பாலசுப்பிரமணியன். 2. மண்குடிசை குறிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/124&oldid=586194" இலிருந்து மீள்விக்கப்பட்டது