பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பெருந்தகை மு. வ.

திகழ்ந்தார். திரு. ரா. சீனிவாசன் அகநானூற்றை ஆய்ந்து 1962இல் எம். லிட் பட்டம் பெற்றார் திரு. சி. பாலசுப்பிர மணியின் குறுந்தொகையை ஆய்ந்து 1968இல் எம் லிட். பட்டம் பெற்றர். இவ்வாருக, மு.வ. பல்கலைக் கழகப் பணியில் அமர்ந் தது மேலும் ஆராயும் மாணவர்களைப் பெருக்கிப் பட்டங்கள் பெறுவதற்கு ஊக்குதலும் உதவியுமாகத் திகழ்ந்தது.

மு. வ. சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1961 முதல் 1971 வரை பத்தாண்டுகள் பணிசெய்தார். இக்காலத்தில் மாணவர் பலர் டாக்டர் பட்ட ஆராய்ச்சி மேற் கொண்டனர். ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு நாள் என்று வரன்முறைப் படுத்தி அவ்வந் நாள்களில் அந்த மாணவரை அழைத்து அவர்தம் ஆராய்ச்சியினை மேற்பார்வை செய்வார்; வழிகாட்டுவார்; மேலும் அவ் ஆராய்ச்சி தொடர்பாகக் கற்க வேண்டிய நூல்களைக் குறிப் பிடுவார். கட்டுரைகள் எழுதிக் கொண்டு வந்தால் அதனை ஆய்ந்து கருத்துக் கூறுவார். அதன் சிறப்புக்குரிய குறிப்பு களைப் பொறிப்பார். இவ் வகையால் தமிழ் ஆராய்ச்சித் துறை தனிப்பெருஞ் சிறப்பும் பொலிவும் உடையதாகத் திகழ்ந்தது.

பல்கலைக் கழகத்தில் மு.வ. பணி புரிந்த காலத்தில் அவ ரிடம் பயின்று சிறப்புற்ற மாணவர்கள் பெயர்களை அறிந்து கொண்டால் டாக்டர் மு.வ. தமிழ்த் துறையின் ஆக்கத்திற்குச் செய்துள்ள அரும்பணி வெளிப்படுதல் ஒருதலை; ஒற்றைத் திரிவிளக்கு ஓராயிரம் விளக்குகளை ஒளிவிடச் செய்யும் உண்மை விளங்கும்.

ஆண்டு பயின் ருேர் பட்டம் 1962-63 திரு. எம். இசரேல் பி. எச். டி.

, ஆர். கே. நாகு , மின்னூர் சனவாசன எம். லிட். , , தி. முருகரத்தினம் 7 7 செல்வி. வி. சி. சசிவல்லி பி. எச். டி.

திரு. வ. தெ. மாணிக்கம் 7 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/138&oldid=586209" இலிருந்து மீள்விக்கப்பட்டது