பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பெருந்தகை மு. வ.

பல்கலைக் கழகத் தூண் :

ஒருமுறை சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் (Syndicate) மு. வ வைப்பற்றிப் பேச்சு எழுந்தது. அப்பொழுது துணைவேந்தர் ஏ.எல். ழுதலியார் அவர்கள் D. Waradarajan is one of the pillars of the University. I am watching. his steady progress right from the year 1939 and others may not be knowing as I know him” arsorg), 356thiolil-mif. அதாவது, டாக்டர் வரதராசன் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துரண். அவர்தம் ஒரு சீரான வளர்ச்சியினை 1939 ஆம் ஆண்டில் இருந்து பார்த்து வருகிறேன்; என் சீனக் காட்டிலும் அவர் வளர்ச்சியை அறிந்தவர் எவரும் இருக்க இயலாது” என்பதாகும். மு. வ. அவர்களும், ‘என் வளர்ச்சிக்குக் காரணராய் அமைந் தவர் டாக்டர் ஏ. எல். முதலியார் அவர்களே ஆவர். பலமுறை நான்போய் நன்றி செலுத்திய ஒரே ஒருவர் அவரே. துணை வேந்தர் பதவியேற்குமுன் அவர் வாழ்த்துப் பெற்றுச் சென் றேன்; மதுரையில் நான் துணைவேந்தராய பின் ஒருமுறை நேரே வந்து வாழ்த்தினர். துணைவேந்தர் பதவியில் சில சிக்கல்கள் ஏற்பட்டபொழுது அவர் எனக்கு வழிகாட்டி உதவி ஞர் என்று நன்றி ததும்பக் குறிப்பிடுவார்.

திரு. ஏ. எல். முதலியார்க்குப் பின்னே வந்த துணை வேந்தர் தாமரைச் செல்வர் நெ. து. சுந்தரவடிவேலு ஆவர். அவரும் மு. வ. வின் மேல் தனியன்பும் மதிப்பும் வைத்திருந் தார். மு. வ. அவரைக் காண வருங்கால் எழுந்து நின்று கை கூப்பி வரவேற்று அமரச் செய்து அதன்பின்னரே அமர்வார். “தாங்கள் துணைவேந்தர்; நான் தங்களின் கீழ்ப் பணியாற்றும் பேராசிரியன்’ என்று அடக்கத்துடன் மு. வ. கூறுவதுண்டு: அதற்கு மறுமொழியாகத் திரு. நெ. து. சு, ‘நீங்கள் என்னை விட ஆறு திங்கள் மூத்தவர்கள்; எனவே அந்த ஒரு காரணத்திற். காகக் கூட் நான் எழுத்து நின்று தங்களை வரவேற்கலாம்’ என்பார். இவ்வாறு தலைமைப் பொறுப்பில் இருப்பாரும் ് தந்து போற்றும் தகவு உடையவராக மு. வ. விளங்கினர்.

மு. வ. பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த பத் தாண்டுக் கால அளவில் வெளிவந்தவை மண்ணின் மதிப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/140&oldid=586212" இலிருந்து மீள்விக்கப்பட்டது