பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பெருந்தகை மு. வ.

மகளார், ஆனந்தபோதினி திரு. நா. முனுசாமி முதலியாரின் மகள் வழிப் பேர்த்தியும், அரங்கநாத முதலியாரின் மகன் வழிப் பேர்த்தியும் சென்னை ரிசர்வ் பாங்கு திரு. மே, இராசாராம் முதலியாரின் மகளும் ஆகிய கலாநிதி என்பார்.

மு.வ. படத் திறப்பு : * * * * *

பச்சையப்பரால் வளர்ந்து, தம்மை வளர்த்த பச்சையப்ப ருக்குத் தனிப் பெருமை தந்த மு.வ. வின் ஒவியத்தைப் பச்சை யப்பர் கல்லூரியில் நிலை பெறுத்தக் கல்லூரி மேலாண்மைக் குழு வின்றாம் பேராசிரியர்க்ளும் மா ணவர்களும் விழைந்தனர். அவ் விழைவு பேரறிஞர் அண்ணு அவர்களை அழைத்து மு.வ. வின் படத்தினைத் திறந்து வைக்க ஏவியது. அறிஞரை அறிஞர் பாராட்டுவது தானே தகவெனக் கண்டது ஆர்வலர் உள்ளம். அறிஞர் அண்ணு அரசு கட்டிலில் இருந்த காலம்! “ அறிவுடை ஒருவன அரசனும் விரும்பும்’ என்பதைத் தம் வருகையால் மெய்ப்பித்தார் அண்ணு.

அண்ணு அவர்கள் உடல்நலம் இல்லாமல் இருந்தார். இருந்தும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனர் பட த்தை கலைஞர் . கருணு நிதி அவர்களும் டாக்டர் மு. வ. படத்தை so

.'#; ‘திறந்து வைக்க ஏற்றுக் ஏற்றுக் கொண்டு உரையாற்ற எண்ணிய பொழுதினும் மிகுதி யாக உ ரையாற்றினர். தமிழ் மொழியைப் பற்றியும் அந்த இரு பெரியார்களே ப் பற்றியும் பேசத் தொடங்கியதாலே உடல் நிலையை மறந்து நான் பேசவேண்டு மென்று, கருதியதைவிடக் கொஞ்சம் நீண்ட நேரம் பேசிவிட்டேன்’ என்று பேச்சின் இடையே கூறினர். அறிஞர் பாராட்டு :

மு.வ, வின் எழுத்தாற்றலையும் , பிறரைச் சிந்திக்கச் செய் யும் திறத்தையும் அறிஞர் பாராட்டிர்ை.

சிலருடைய எழுத்துக்களையும் கருத்துக்களையும் ஏற்றுக் கொள் வார்கள் மிக ஆர்வத்தோடு; அதைப் போலவே சிலர் மறுப்பார்கள் மிக வேகத்தோடு, ஆளுல் டாக்டர் மு.வ. அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/144&oldid=586216" இலிருந்து மீள்விக்கப்பட்டது