பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் 137

வினவியவர்க்கும் வெளிப்படுத்தாது மறைத்தே வைத்தார். துணைவேந்தராகிய மு. வ. வானூர்தியிலே புறப்பட்டாரா? மகிழ்வுந்திலேயாவது கிளம்பினரா? வழக்கமாகப் புறப்படும் தொடர் வண்டியில் சென் ருர் 31-1-71ஆம் நாள் எழுமூரில் இருந்து பாண்டியன் விரைவு வண்டியில் புறப்பட்டார். மிக நெருங்கிய ஒரு சிலரே தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து வழியனுப்பிவைக்கும் வாய்ப்புப் பெற முடிந்தது. அத்தகு எளிமையும் ஆடம்பரம் அறியாததும் ஆகியது மு. வ. உள்ளம்.

கட்டடக் கலைஞர்:

மதுரைப் பல்கலைக் கழகம் தளர்நடைப் பருவத்தில் இருந்தது. அதன் வளர்ச் சிக்குப் பல்வேறு அடிப்படைச் செயல்கள் செய்ய வேண்டியிருந்தன. அவற்றுள் தலையாயது பல்கலைக் கழகத்திற்கு ஏற்ற வளமான கட்டடங்கள். பழங்கால மன்னர்கள் இறைவனுக்குக் கற்றளி எடுத்து அழியா வாழ்வு பெற்றனர். காவிரியில் கல்லணை கட்டிக் கல்யானைமேல் அமர்ந்த களிற்றியான ஆளுன் சோழன் கரிகாலன். கல்வெட்டுகளைப் பொறித்து அழியா வாழ்வு பெற்றனர் இடைக்கால வேந்தர்கள்! மாமல்லைக் கலைக்கோயில் எழுப்பிப் பல்லவர் குலம் பாடுபுகழ் பெற்றது. அவ் வண்ணமே மதுரைப் பல்கலைக் கழகத்திற்கு வளமான மாளிகைகளை எழுப்பி மாயாவுடம்பு பெற்றார் மு. வ. பல்கலைக் கழகக் கட்டடத்தின் ஒவ்வொரு கல்லும், மு. வ வின் வரலாறு கூறும்; ஒவ்வொரு புல்லும் மு. வ. வின் புகழ்பாடும். தமிழ்க் கலைஞர் கட்டடக் கலைஞராகவும் விளங்கும் சீர்மையை எடுத்துக் காட்டவே மு. வ. துணைவேந்தர் பொறுப்பைத் தாங்கினுர் போலும்!

பதவிச் செருக்கு பலரை மயக்கும்; தலைகால் தெரியாமல் நடக்கவிடும்; இறுமாப்பை உண்டாக்கவும் செய்யும்; பழைமை நிலைமையை மறக்கச் செய்து தான்தோன்றித்தனத்தையும் ஊட்டும் ஆணுல் மு. வ. வின் நிலைமை என்ன? ‘கல்விசேர் மாந்தரின் உள்ளம்போல் நெற்கதிர் தலே தாழ்ந்ததாகக்’ கூறிஞரே சிந்தாமணியார், அந் நிலையில் ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றாேராகத் திகழ்ந்தார் மு. வ. என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/149&oldid=586221" இலிருந்து மீள்விக்கப்பட்டது