பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைவேந்தர் 139

யாமையை வலியுறுத்துவார். அவர்தம் கருத்துக்களைப் போற்றிச் செயலாற்றுவாரை நெஞ்சு வக்க-நா நயக்க-நன் கனம் பாராட்டுவார். தட்டிக் கொடுத்து வேலையில் சிறப்புக் காண்பது மு. வ. வுக்குக் கைவந்த கலை!

பேச்சுத்திறம் :

மு. வ. வின் ஆங்கில உரையாடல் ஆயினும் சரி, தமிழ் உரையாடல் ஆயினும் சரி கொச்சையற்றது. கூறியதையே கூருமல் கொள்வார் உளங் கொளச் சுருங்க உரைப்பார்; விளக்க வேண்டிய பொருளாயின் எளிதில் புரிந்து கொள்ளுமாறு: விளக்கமாகவும் உரைப்பார்; பேச்சில் உணர்ச்சி வயப்பட மாட் டார். ஆனல், அவர் உரை கேட்போரைக் கவரக் கூடியதாகவும், உணர்வுகளைத் துாண்டக் கூடியதாகவும் அமையும்.

பிறர்மனம் புண்படாமல் பேசுவார்; ஒளிவு மறைவு இல் லாமல் வெளிப்படையாகப் பேசுவார்; அவர் பேச் சில் உருக்கம் இருக்கும்; அதே பொழுதில் உறுதியும் இருக்கும். அவர் பேச்சில் பணிவு இருக்கும்; அதே பொழுதில் துணிவும் ஊடாடி நிற்கும்.

பிறரைப் பற்றிப் புறங்கூறுதலை அறவே கருதார். பிறர் கூறினும் தம் காதில் வாங்கிக் கொள்ளார்; மாருகச் சினங் கொண்டும் தடுத்து அறிவுறுத்துவார். நல்லவற்றைக் கூறு வதிலும் கேட்பதிலும் மகிழ்ச்சியடைவார். பிறர் மறையில் விடன்; புறங்கூற்றில் ஊமை’ என்னும் நல்லோர்மொழிக்குச் ச ன்றாக விளங்கினர்.

டிங்குமுறை :

தம் அலுவலகத்தில் மேசையில் உள்ள பொருள்களே அந்தந்த இடைத்திலேயே வைக்கப் பழகவேண்டும் என்று க்கு அனுக்கமானவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார். தாமும் அவ்வாறே போற்றுவார். எங்கும் எப்பொருளும் இருக்க -- * - ** - _ ..” on r --” == - *. வனடிய நிலையில் இருப்பதையே விரும்பிஞர். அவ்வாறு இருந் ால் வேண்டும்போது தேடுதற்குப் பொழுது செலவிடாமல் வறியும் போகாமல் தட்டின்றிப் பெற்றுக்கொள்ள முடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/151&oldid=586224" இலிருந்து மீள்விக்கப்பட்டது