பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பெருந்தகை மு. வ.

யாரேனும் மலர்பறிப்பதைக் கண்டால் பொறுக்கமாட்டார். காரில் சென்று கொண்டிருந்தாலும் வண்டியை நிறுத்திக் குற்ற வாளியைக் கண்டிக்கத் தயங்கமாட்டார். அவர், நாடோறும் உலாவருவதால் பல்கலை நகரில் தங்கியிருக்கும் ஆசிரியப் பெரு மக்களிடத்தும், மாணவ மாணவியர்களிடத்தும், பணியாளர்களி டத்தும் அவருக்கென நன்மதிப்பு உண்டு. கூடவே பயமும் உண்டு எனலாம். துணைவேந்தருக்குத் தெரியாமல் அங்கு ஒன்றும் நடக்க முடியாது. சுருங்கச் சொன்னல் டாக்டர் மு. வ. அவர்கள் பல்கலை நகருக்கு ஒரு தந்தையாக விளங்கினர். அண் மையில் உள்ள கிராமமக்களும் அவர்மீது தனி மரியாதை . அன்பு-பக்தி-கொண்டிருந்தார்கள்.’

எழுத்துத்துறைக்கும் ஓய்வு:

மு. வ. முழுமையாகப் பல்கலைக் கழக வளர்ச்சிப் பணிகளி லேயே கருத்துச் செலுத்தினர். மிக அரிதாகவே மாநாடு களிலும் மன்றங்களிலும் கலந்துகொண்டார். பல்கலைக் கழகம் தொடர்பான நிகழ்ச்சிகளிலேயே பெரும்பாலும் பங்கு கொண் டார். அதல்ை அவர் உயிர்ப்பாகக் கொண்டிருந்த எழுத்துப் பணிக்குக்கூட ஓய்வு தந்து விட்டார். ‘என்றும் எழுத்தாளராக இருப்பதையே விரும்புகிறேன்’ என்று வரம்புகட்டிக் கொண் டிருந்த அவருக்கும், அத் துறையையும் “சற்றே விலகியிரு’ என்று ஒதுக்கிவைக்கும் நிலைமையே ஏற்பட்டது என்றால், பல்கலைக் கழகப் பணி, சுமையே என்பது வெளிப்படையாம்.

தமிழ் இலக்கிய வரலாறு :

மு. வ. துணைவேந்தராகிய பின்னர் வெளிவந்த நூல்கள் இரண்டேயாம். அவற்றுள் ஒன்று ‘தமிழ் இலக்கிய வரலாறு: என்னும் நூலாகும்.

1956ஆம் ஆண்டில் கலைக் களஞ்சியம் ஐந்தாம் தொகுதி யில் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் தலைப்பில் நீண்டதொரு கட்டுரை எழுதினர். அதன் விரிவாக ஒரு நூல் எழுத எண்ணி ஞர். ஆல்ை, அவர்தம் மாணவர் சிலர் இலக்கிய வரலாறு படைத்துள்ளதைக் கண்டார். தாம் அப் பணி மேற்கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/160&oldid=586235" இலிருந்து மீள்விக்கப்பட்டது