பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டுச் செலவுகள் 159

28-7-70-பிரமிட் பக்கத்தே pharaS வழிபட்ட சூரியன் கோயில் காரைக் கற்களில் வேலைப்பாடுகள் இருந்தன. கவரப் பட்டன-இப்போது காவல்-சிமெண்ட் இல்லாத காலம்சாந்து இல்லாமல் பொருத்தப் பட்ட 4 X6 கற்கள். வெளியே 25 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கொண்டுவரப்பட்டன. உள்ளே செல்லும் வழியிலும் கல் கூரைகள், கல் சுவர்கள் குடைவு கள்-நூருயிரக் கணக்கானவர்களுக்கு வேலை-பல காலம். ஆளுல் பொய்ம்மை-இறந்த பிறகும் நிலத்திருக்கஉடலுடன் இருக்க விரும்பினர். அரச குடும்பத்தினர் அமைச்சர் முதலானவர்களுக்குச் சாதாரண சவ அறைகள்-குடியிருந்த ஏவலர்க்கு மண் வீடுகள்-மண் சுவர்கள்-இன்னும் உள்ளன.

பொய்ம்மை-உடல் அழியும் என உணராமை எலும்பு களும் இன்று காணுேம். இறந்த பிறகும் வாழும் ஆசை. குழந்தைகளில் தாம் இருத்தலைக் காணும் தசரதர்கள் அதுவும் சிறிது பொய்ம்மையே.

மெய்ம்மை :

வாழும்போதே உடல் சட்டை எனத் தெளிந்து இறைவன் நிழலின்கீழ் வாழப்போவதாக நம்புதல். அல்லது நான் இறை வனின் ஒளிக்கதிர் என உணர்தல் நல்லது. இந்தியத் தத்துவ உயர்வு.

10-7-70 முதல் 28-7-70 முடிய நாட்குறிப்பும் பொதுக் குறிப்பும் தொடர்ந்து வரைந்துள்ளார் மு.வ. அவற்றை அவரே விரித்து எழுதியிருந்தால் மிக அரிய பயண நூலாக வெளிப்பட்டிருக்கும்.

உள்ளங்கவர் கள்வர் :

மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக 1973ஆம் ஆண்டில் எடின்பரோவுக்கு மு.வ. சென்ற செலவு தமக்கு உவகைதந்ததை டாக்டர் ஆர். இ. ஆஷர் குறிப்பிடுகிறார் .

1973ஆம் ஆண்டில் எடின்பரோவில் காமன் வெல்த்து பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/171&oldid=586247" இலிருந்து மீள்விக்கப்பட்டது