பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பெருந்தகை மு. வ.

அரசினர் மோதல் கூட்ட்ம் வேண்டா

மு. வரதராசன், செஞய் நகர்,

தமிழ்ப் பேராசிரியர். சென்னை -30.

29–7–1962. அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் 17 மடல் பெற்றேன். யான் பல்கலைக் கழகப் பணி யாக வருதலால், அரசியல் அரசினர் மோதல் உள்ள கூட்டங் களில் கலந்து கொள்ளல் இயலாது. அந் நிலை இல்லையாயின், தொடக்க விழாவுக்கு உடன்படுகின்றேன்.

மற்றாென்று : அன்று, இரவு வண்டியில் சென்னைக்குத் திரும்பி வர விழைவதால், கூட்டத்தைச் சுருங்கிய அளவில் நடத்துதல் நல்லது.

தங்கள் அன்புள்ள, (ஒ - ம்) மு. வரதராசன் திரு. இரா. இளங்குமரன்.

நண்பு பாராட்டல்

சென்னை-80. 20–12–67. அன்புள்ள அண்ணு,

வணக்கம். நலம். கடிதம் பெற்றேன். தாங்கள் இரண்டு பேரும் இல்லத்தரசியரோடு வர வே ண்டும். அவர்களும் சிலநாள் சென்னையில் இருந்து பார்க்க வே ண்டும் அல்லவா? ஆகவே தவருமல் நீங்களும் அவர்களுமாக வர வேண்டும் (இருவர் இருவராக).

3-1-67 காலையில் இங்கே வரவேண்டும். 2-1-67 காலையில் சிலைத் திறப்புக்கள் நடைபெறும். அதற்கும் வர வேண்டும் என்றால் 2 -1-67 காலையிலேயே வரவேண்டும். உ ண்டி உறக்கம் மற்ற ஏற்பாடுகள் என் பொறுப்பு 11-1-67 தி ரும்பலாம்.

மாநாடு இருவகை : கல்வி அமைச்சர் நடத்தும் கருத் த ரங்கில் ஆட்களைக் குறைக்கிறார்கள். மற்றவர்கள் நடத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/184&oldid=586263" இலிருந்து மீள்விக்கப்பட்டது