பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையும் கல்வியும் 25

செம்மையும் சால்பும் துறைக்கு ஈர்த்துச் சென்றன. ஆங்கே எழுத்தராஞர். கையூட்டு கணக்கின்றி வருதற்கு வாய்ப்பான அத் துறையிலும் கடமை தவறினர் அல்லர். அறநெறி அன்றிப் பிறநெறி புகுந்தார் அல்லர். கொண்ட குறிக்கோளில் அணுவும் அசைவு இன்றிக் கடமை ஆற்றினர். ஆர்வம் பெருக இவர் செய்த அயராப்பணி, அலுவலர்களைக் கவர்ந்த அதே பொழுதில் இவர் உடலைத் தாக்கிற்று.

ஆற்றுவார் மேற்றே பொறை’ என்பது வள்ளுவம். தாங்குவார் மேல் தானே சுமை ஏறும் இந் நெறிப்படி மு. வ. வின் மேல் வேலைச் சுமை அளவின்றி ஏறியது. இயல்பாகவே மெலிந்த உடம்பினரான மு. வ. தொடர்ந்து செய்த கடும் உழைப்பால் பலமுறை நோய்களுக்கு ஆட்பட்டார். அப் பொழுதில் உடலைப் பேணி உறுதியாக்க வேண்டும் என எண்ணினர். கடுமையான தண்டால் முதலிய தசை நார்ப் பயிற்சிகளைச் செய்வதில் ஈடுபட்டார். நலிந்த உடல் இப் பயிற்சியைத் தாங்கும் வலுவை இழந்தது. அதல்ை மூச்சு இழுப்பு என்னும் ஈளை நோய்க்கு ஆட்பட்டு அல்லலுற்றர். அவ்வல்லலே அன்னைத் தமிழுக்கு நல்வாழ்வு ஆயிற்று !

ஒருநாள் வெளியூரில் அலைந்த பொழுது இரத்தம் இரத்த மாக உமிழும் நிலையைக் கண்டவர்கள், என்னைப்பற்றி மிகக் கவலைப் பட்டார்கள். மருந்துகள் பல சாப்பிட்டும் உடல் தேருமையால் தொழிலை விட்டுவிட்டு, மூன்று ஆண்டுகள் கிராமத்தில் தங்கி ஓய்வு கொண்டேன். அந்த ஓய்வுக் காலமே என்னைத் தமிழ்த்துறைக்கு இழுத்து வந்தது என்று கூற

வேண்டும்.’

நாட்டுப்பற்று :

1928 ஆம் ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டுவரை மூன்று ஆண்டுக் காலமே மு. வ. அரசினர் பணி புரிந்தார். அக் குறுகிய காலத்திலும் எடுத்த பணியில் சுடர்விட அவரால் முடிந்தது. தம் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் மேலதிகாரிகளின் பாராட்டைப்பெறவும் முடிந்தது. காட்டாற்று வெள்ளம்

_ _ ---

1. தினத்தந்தி 5-7-1978.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/37&oldid=586295" இலிருந்து மீள்விக்கப்பட்டது