பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலம் தந்த பெருவாழ்வு 31

இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், ! இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள்

சிலப்பதிகாரமும் மணிமேகலையும்; இயற்கைத் தவம் சிந்தாமணி; இயற்கைப் பரிணுமம் கம்பராமாயணம்; இயற்கை அன்பு பெரியபுராணம்; இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக

திருவாய் மொழிகள்’’’

இத்தகைய இயற்கை இன்பத்தமிழ் உடலையும் உள்ளத் தையும் ஒருங்கே வளர்த்து உயிராக்கம் செய்யாது ஒழியுமோ?

வித்துவான் முதனிலைத் தேர்வு :

வேலத்தில் வாழ்ந்த மூன்றாண்டுக் காலமும் தமிழ் நூல் களைக் கற்பதிலேயே செலவிட்டார். யான் படிக்கும் போது என்னை நான் அறியேன்; ஊன்படிக்கும்; உளம்படிக்கும்; உயிர் படிக்கும்; உயிர்க்கு உயிரும்தான் படிக்கும்’ என்னுமாறு தோய்ந்து கற்றார். 1934 ஆம் ஆண்டில் வித்துவான் முதனிலைத் தேர்வு எழுதிச் சிறப்பாக வெற்றி பெற்றார்.

வித்துவான் தேர்வை மு. வ. முழுமையாக முடிக்கும் வரை முத்தமிழ் அன்னை காத்துக் கிடக்கவில்லை. விரைந்து தன் செல்வ மகனைத் தன் திருப்பணிக்கு ஆளாக்கத் துடித்தாள். அத் துடிப்பு மு. வ. வின் உள்ளங்கவர்ந்த தமிழையா முரு கைய முதலியார் ஓய்வு ஆயிற்று. எந்த வகுப்பிலே எவர் அர வணைப்பிலே உருகி உருகிப் பாடம் கேட்டாரோ அவ் வகுப் பிலே அவர் இடத்திலேயே பாடம் கற்பிக்கும் பேறு வாய்த்தது. வேலை வேண்டும் என விண்ணப்பித்து முயன்று பெற்ற வாய்ப்போ அது? அன்று ! அன்று !

தேடி வந்த வேலை :

மு. வ. அவர்கள் வருவாய்த்துறையில் பணி செய்தார் அன்றாே? அக் காலத்தில் அவர் ஆற்றிய கடமைச் சிறப்பையும், 1. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து. பக். 22-23- ==

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/43&oldid=586303" இலிருந்து மீள்விக்கப்பட்டது