பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெருந்தகை மு. வ.

ஒரு வகுப்பு :

“எழுவாய் பயனிலை கற்பிக்கும் வாய்ப்பு எனக்கு ஒரு நாள்” வாய்த்தது. அவருடைய புகழை எவராலும் சொல்ல முடியாது” என்பது வாக்கியம். மாணவரைக் கேட்டேன். வெவ்வேறு வகையான விடைகள் வந்தன. எல்லாம் தவறே முடியாதுஎது என்று கேள்வி கேட்குமாறு வழிகாட்டினேன். அப்போதும் பலரும் திகைத்தனர். ஒருவன் எழுந்து சொல்வது-எழுவாய்’ என்றான். வாக்கியத்தில் இல்லையே’ என்றேன். மற்றாெருவன் தோன்றா எழுவாய்’ என்றான். தோன்றா எழுவாயினைச் சேர்த்துப் படித்தால் வாக்கியம் நிரம்ப வேண்டும்; இது மிகை யாகின்றது. ஆகையால் தோன்றா எழுவாய் ஆகாது. சொல்ல’ என்பதை எழுவாயாகக் கொள்ள வேண்டும்’ என்று கற்பித் தேன். இன் ைெரு மாணவன் எழுந்தான். சொல்ல-வினை யெச்சம் என்று சொல்லிக் கொடுத்தீர்கள்’ என்றான். மற்றாெரு வன் எழுந்து ஏதோ கேட்க முயன்று வாளா அமர்ந்தான். இன்ைெருவன் பெயர்ச்சொல்தானே எழுவாயாக வரும் ? ‘வினையெச்சம் எழுவாய் ஆகுமா ?’ என்று கேட்டான்.

மாணவர் மூளையை எண்ணி வியந்தேன். இது போன்ற வாக்கியம் என் ஆரும் வகுப்புக் கல்வி முதற்கொண்டே என் உள்ளத்தைக் கலக்கித் தெளிவித்திருப்பதால், அன்று மாணவர் உள்ளம் கொள்ளுமாறு விளக்க முடிந்தது.’

பிறவி ஆசிரியர் :

மாணவப்பருவம் புதிது புதிதாக அறிந்து கொள்ளத் துடிக்கும் பருவம். சிந்திப்பதற்கும் செயலாற்றுவதற்கும் வாய்ப் புகளைத் தேடும் பருவம். அவர்கள் ஆர்வத்தையும் ஆக்கத் திறனையும் வளர்க்கும் வகையில் ஆசிரியப்பணி அமையுமாயின் அது வெற்றிபெற்ற பணி ஆகும். இல்லையானல் தோல்வி மேல் தோல்வியும், கற்பித்தலின்மேல் வெறுப்பும், மாணவர்கள்மேல் சலிப்பும் உண்டாகும். மாணவர்கள் மையத்தில் பூஞ்சோலையில் உலவுவது போலவும், அருவிச்சூழலில் இருப்பது போலவும்

1. மொழியியற் கட்டுரைகள். பக். 34-35.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/46&oldid=586306" இலிருந்து மீள்விக்கப்பட்டது