பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பெருந்தகை மு. வ.

தொகுத்துக் குறிப்பார்; ஆய்வுப் பொருளை வடித்துக் கொள் வார். தனித்திருந்து கற்பதும், தனியே சிந்தனையுடன் உலாவி வருவதும் மு.வ. வுக்கு என்றும் இனிமை தரும் செயல்க ளாகும்.

மாலைப் பொழுதுகளில் நாள் தவருமல் உலா வச் செல்வார். அப்பொழுது ஒரு கையில் பையும் மற்றாெரு கையில் குடையும் எடுத்துச் செல்வார். பையில் திருக்குறளோடு அன்று படித்து முடிக்க வேண்டிய இன்றியமையாத சில நூல்களும் இருக்கும். ஊருக்கு வெளியே சென்று ஆள் அரவமற்று அமைத தவழும் இயற்கை எழில்மிக்க இடத்தில் தனியே அமர்ந்து படிப்பார். மாலையாகி இருள்கவிந்து, கோலநிலா வானப் பெருவழியில் உலாக் கொள்ளும் முன்னிரவுப் பொழுதில் மீள்வார். சிலநாட் களில் அவருடன் சில நண்பர்களும் செல்வர். போகும்போதும் திரும்பும் போதும் நண்பர்களுடன் கலகலப்பாக உரையாடி மகிழ்வார். படிப்பதற்கெனத் தேர்ந்து கொண்ட இடத்தைச் சேர்ந்ததும் ஒரு தனி யோகு செய்யும் உயர்தவச் செல்வர் போல் அமைந்து விடுவார். நூற் செல்வத்துள் ஒன்றிவிடுவார். நண்பரும் படிப்பாவல் உடையவர் ஆயின் தம் பையிலுள்ள ஒரு நூலை எடுத்துத்தந்து படிக்கச் சொல்வார். இவ்வாறு இயற்கைச் சூழலிடையே இனிதமர்ந்து நூல்களை முழுமை முழு மையாகவே வரப்படுத்திக் கொண்டார். அவ்வாறு குறிப்பிடத் தக்கவற்றுள் திருக்குறளும், திருவாசகமும் தலையாயவையாம்.

நட்பாடுந் திறம் :

மு.வ. விற்குப் பல்வேறு நிலைகளிலும் நண்பர்கள் இருந் தனர். அவர்களுள் ஏற்றத் தாழ்வு என்றும் காளுர். ஏழை எளியவர்களாயினும் உளங்கலந்து ஒன்றி உரையாடுவார்; உற வாடவும் செய்வார். நண்பர்களுடன் மட்டுமல்லாமல் நண்பர் குடும்பத்தினரோடும் இரண்டறக் கலந்து உறவாடுவார். சிறு வர்களோடும் அளவளாவி இன்புறுவார். தம்மோடு கலந்து பழகுபவர்களை யெல்லாம் சுற்றமெனக் கருதி இன்ப அன்பு கெழும அரவணைப்பார். இது வேலம் தந்த விழுமிய பொருள் என்பது குறிப்பிடத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/64&oldid=586326" இலிருந்து மீள்விக்கப்பட்டது