பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 61.

அமுதை வாரி வாரி வழங்கினர். ஐந்து ஆண்டுகள் போனதே தெரியவில்லை.’

மு.வ. பிறவி ஆசிரியர். கற்பித்தலைத் தொழிலாகக் கொண் டார் என்பதினும் தொண்டாகக் கொண்டார் என்பதே தகும். மேலதிகாரத்தவர் கண்காணிப்பார்கள் என்றாே, அவர்கள் பாராட்டைப் பெற வேண்டும் என்றாே எண்ணிக் கற்பித்தலைக் கருதாத உள்ளம் அவர் உள்ளம். மாணவர்க்குத் தெளிவு உண் டாகவேண்டும்; தம் நெஞ்சுக்கு நிறைவு உண்டாக வேண்டும் என்பவையே நினைவில் நிற்பன. ஆதலால் வகுப்பு ஆராய்ச்சி மன்றமாகவும், கருத்தரங்கமாகவும் திகழும். கண்டறியாதன வெல்லாம் கண்ணுறக் காட்டி விளக்கம் பெறச் செய்விப்பது, மு.வ. கடைப் பிடித்த கல்விநெறி. இதற்கு எண்ணற்ற சான் றுகள் உளவாதலை அவர்தம் மாணவர் அறிவர். ஒரு சான்றைச் சுட்டிக் காட்டுகிறார் மு.வ. வின் அன்பு மாணவர் திரு. மின்னுரர் சீனிவாசன், ==

‘ஒருசமயம் புன்கம் பூக்களை ஒரு குவியலாகத் தம் பையில் போட்டுக் கொண்டுவந்து மேசையின்மேல் வைத்தார். புன்கம் பூக்கள் மேசையின் மேல் இறைந்திருந்தன. வகுப்புத் துவங். கும் போது இது என்ன புதுக்காட்சி. பேராசிரியர் ஏன் இந்தப் பூக்களைக் கொண்டுவந்தார்? என்று எங்களுக்குப் புரியவில்லை. பேராசிரியர் தொடங்கினர்: பொரிப்பூம் புன்கு என்றாரே சங் கப் புலவர்; பாருங்கள்-சிந்திக் கிடக்கும் புன்க மலர்களே! தெரி யாமல் அயர்ந்துபோய், பொரி என்று வாயில் போட்டுக்கொள்ள யாரேனும் நினைத்தாலும் வியப்பதற்கில்லை. பாருங்கள் இலக் கியப் புலவரின் கூரிய கலைப் பார்வையை’ என்றார். அவர் சொன்னது முற்றும் உண்மை என்பது அந்தப் பூக்குவியலைப் பார்க்கப் பார்க்க விளங்கலாயிற்று.”* o

கல்லூரிக்கு வந்தபின்னரும் மு.வ. முன்னே உடுத்தது. போலக் கதராடையே உடுத்து வந்தார். காந்தியடிகள்மேல்

1. டாக்டர் மு.வ. அவர்களின் பேராசிரியத் திறம். திரு. கி. வேங்கடசாமி எம்.ஏ., பேராசிரியர் மு.வ.-பேராசிரியர் அ.மு.ப. கருத்து தரங்கக் கட்டுரைகள் பக். 41. 3. நான்கண்ட மு.வ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/73&oldid=586336" இலிருந்து மீள்விக்கப்பட்டது