பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பெருந்தகை மு. வ

பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். இரண்டெழுத்தும் மூன்றெழுத்தும் இடம் பெறும் பெயர்கள்! ஆனல் எண்ண எண்ண இனிக்கும் வரலாறுகளைத் தம்முள் அடக்கிக் கொண்டுள்ள பெயர்கள். ‘இப்படி வாழவேண்டும்’ என்று உலகுக்குக் கற்பிக்கும் எடுத்துக் காட்டான பெயர்கள். மு. வ. வின் பெயர்த் தேர்ச்சியின் பெற்றி இது.

எழுத்துப்பணி :

மு. வ. திருப்பத்துாரில் இருந்த காலத்தில் இருந்தே எழுத்துப்பணி தொடங்கி விட்டது. ஆயினும் சென்னைக்கு வந்த பிறகே கட்டுரைகளை எழுதுவதுடன் அமையாமல் நூல் எழுதும் பணியிலும் ஈடுபட நேர்ந்தது.

மு. வ. அழுத்தமான சிந்தனையாளர். எப்பொழுதும் ஏதேனும் ஒன்றைச் சிந்தித்துக் கொண்டே இருப்பார். கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து போகும் பொழுது, சிந்தித்துக் கொண்டே வீட்டைக் கடந்தும் சென்று விடுவதுண்டு. எதிரே வரும் மாணவரோ நண்பரோ “எங்கே ஐயா போகிறீர்கள்?” என்று கேட்ட பிறகே தம் நிலைக்கு மீண்டு வீடு திரும்புவதும் உண்டு.

ஒருமுறை உறவினர் ஒருவரின் உடல்நிலை பற்றிக் கவலைக் கிடம் எனத் தந்திச் செய்தி வந்திருந்தது. வகுப்பறைக்குச் செல்லுமுன் அத் தந்தி வந்திருந்தது. பிரித்துப் படித்தார்; கலங்கினர்; கடமையை மேற்கொண்டு வகுப்பினுள் நுழைந்தார்: பாடத்திலே ஊன்றிக் கற்பித்தார். வகுப்பு முடிந்த பிறகே தந்தி. நினைவு வந்தது. இவ்வாறு சிந்தனைச் செல்வராகத் திகழ்ந்தார் மு. வ. எனினும் அச் சிந்தனைக்கு எழுத்துருவம் கொடுக்கும் வாய்ப்பும் வேண்டுமே! அவ் வாய்ப்புத் தானே தேடிவந்து தருவதுபோலச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் முன் னின்றது.

சைவ சித்தாந்தக் கழகத் திங்கள் இதழாகிய செந்தமிழில் மு. வ. வின் கட்டுரைகள் சில திருப்பத்துாரில் இருந்தபோதே வெளிப்பட்டதுண்டு. அத் தொடர்பால் கழக ஆட்சியாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/76&oldid=586339" இலிருந்து மீள்விக்கப்பட்டது