பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘78 == பெருந்தகை மு. வ.

பக்கங்களாக விரிந்தது. ‘முன்னங் காட்டி முகத்தின் உரையா ஒவச் செய்தியின் ஒன்று நினைந்து’ என்னும் வரிகளில் அமைந்துள்ள ஒவச் செய்தி’ என்னும் தொடரே நூற் பெயராகியது. ஓவியச் செய்தியின் முடிநிலையாக இப்பாட்டு ஒளிமிக்க ஒரு முழுமணி; இதன் துாய ஒளி கலைத் துறையிலும் வாழ்க்கையிலும் இருளைப்போக்கவல்ல சிறந்த விளக்கம்’ என்று கூறும் மு. வ. ஒன்று’ என்பதற்குத் தரும் விளக்கமும் நயமும் உள்ளங் கொள்ளே கொள்வதாம்.

சிறப்புப் பேராசிரியர் :

சென்னைப் பல்கலைக் கழகம் மு. வ. வுக்குச் சிறப்புப் பேராசிரியர் என்னும் பதவியளித்து (ஆனரரி ரீடர்) சில ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் ஆற்றுமாறு கோரியது. அதன்படி 23-10-44 இல் பச்சையப்பர் கல்லூரியில் ஆற்றிய சொற்பெருக்கே ஓவச் செய்தி”. பின்னர் 17-10-45 இல் சிலப்பதிகாரத்துள் மாதவி’ என்பது பற்றி ஆற்றிய உரை *மாதவி'யாகவும், 4-11-48, 5-11-16 ஆகிய இருநாள்களில் ஆற்றிய உசை முல்லைத்திணையாகவும் உருக்கொண்டன. 11-11-46, 12-11-48 ஆகிய இரு நாள்களிலும் ஆற்றிய புற நானுாற்றில் கையறுநிலைப் பாட்டுக்கள்’ என்னும் உரை புலவர் கண்ணிர் ஆயிற்று. ==

மாதவி :

‘கண்ணகியின் வாழ்வு கணவனுக்காகவே வாழ்ந்து கணவனுக்காகவே முடிந்தது. மாதவியின் வாழ்வு காதலில் நின்று பிறகு அதையும் கடந்து அறத்துறையில் சென்றது. மனம் மாறிய மாதவி பிறந்த குடும்பத்தின் தீமையை வேருடன் களைந்தாள்; அதுபோன்ற மற்றக் குடும்பங்களின் சீர்திருத்தத் திற்கு வழிகாட்டியாக விளங்கினுள்; பெரும் புரட்சி செய்தாள்; கலையின் வளர்ச்சிக்காக மங்கையர் சிலரின் வாழ்வைக் கெடுக்கும் மடமையைக் கொளுத்தினுள்; அரசன் திகைக்க ஊரார் வியக்க, சுற்றத்தார் இரங்க, பெற்றதாயும் வருந்தச் சீர்திருத்தம் செய்தாள். கணிகையரின் வாழ்வுக்கும் தனக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/90&oldid=586355" இலிருந்து மீள்விக்கப்பட்டது