பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பெருந்தகை மு. வ.

குற்றமற்றதா என்று ஆராயப்பட்ட பாட்டு, இன்று எத்தனையோ காவியங்களின் குற்றங்களையும் குணங்களையும் சீர்தூக்க வழி கோலி உதவுகிறது’ என்று முடிப்பது அப் பாட்டின் பயனை நயமுற விளக்குகிறது.

இளங்கோவடிகள் :

சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் தம் அன்னையார் பெயரால் சொர்ணும்பாள் சொற்பொழிவுகள்” என்ற பெயரில் ஓர். அறக் கட்டளை நிறுவியுள்ளார்கள். அதன் சார்பில் மு. வ. அவர்கள் 11-9-59, 12-9-59 ஆகிய இரண்டு நாள்களில் ஆற்றிய மூன்று சொற்பொழிவுகள் இளங்கோ வடிகளைப் பற்றியவை. அவையே இளங்கோவடிகள்’ என்னும் நூலாக உருக்கொண்டன. இளங்கோவடிகள் தமிழர் என்பதை யும், கலைஞர் என்பதையும் அறவோர் என்பதையும் வியத்தக விளக்குகின்றார்.

கண்ணகி :

கண்ணகியின் பெருமையைப் பலரும் அறிய வேண்டும் என்னும் ஆர்வத்தால் எழுதிய நூல் ‘கண்ணகி.’

‘ஏறக் குறைய ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் மாலையில் மதுரை மாநகரத்தின் ஒரு பகுதியில் ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டது. இந்த ஊரில் கற்புடைய பெண்கள் இல்லையா? அருளுடைய சான்றாேர் இல்லையா? அறம் காக்கும் தெய்வமும் இல்லையா? என்று அழுது அரற்றுவது கேட்டது’ என்று கதைப் போக்கு உத்தியிலே தொடங்கிக் சுவையாகச் செல்லும் திறய்ைவு நூல் கண்ணகியாகும்.

மணல் வீடு :

மாசற்ற காதல் வாழ்வைப்பற்றிய சங்கப் புலவர்கள் பாடல்கள் பதினென்றனைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரையாகத் தீட்டப் பெற்றநூல் மணல்வீடு மணலில் வீடுகட்டி விளையாடும் போது குழந்தைகளின் உள்ளத்தில் எவ்வாறு துய்மையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/92&oldid=586357" இலிருந்து மீள்விக்கப்பட்டது