பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

அவர்கள் இழைத்து வரும் அநீதியான, அனாச்சாரச் செயல்கள் அவரைப் பெரிதும் சிந்திக்கத் தூண்டின.

இத் தீய போக்கிலிருந்து மக்களை மீட்க வழி தேடினார். தியான முறைகள் மூலம் தன் உள்ளொளியைப் பெருக்க முனைந்தார். இதற்காக மக்கா நகருக்கருகில் உள்ள ஹிரா குகையில் நாட்கணக்கில் தனிமைத் தவமிருந்தார். அங்கு இறைவனைக் குறித்தும், படைப்பின் அற்புதங்களைக் குறித்தும் ஆழ்ந்த சிந்தனையிலும் தியானத்திலும் ஈடுபடலானார். இதற்காகப் பல நாட்கள் பசித்திருந்தார், தனித்திருந்தார், மனத்தை அடக்கி அறிவு வழி சிந்திக்க மோனத் தவமிருந்தார். இவ்வாறு நாட்கள் வாரங்களாகவும் மாதங்களாகவும் ஆண்டுகளாகவும் உருண்டோடின.

இறைமறை பெற்ற
இரவு

கி.பி. 609, ரமளான் மாதம் ஒரு நாள் இரவு. ஹிரா குகையில் தியானத்திலிருந்த அண்ணல் முஹம்மத் அவர்கள் ‘ஓதுவீராக’ எனும் குரல் கேட்டுத் திடுக்கிட்டார். அவர் முன் காட்சியளித்த ஓர் உருவம் ‘நான்தான் ஜிப்ராயில். இறைவனுடைய செய்திகளையும் அவனது வேத வெளிப்பாடுகளையும் மனித இனத்திற்கு அறிவிப்பதற்காக, இறைவனால் நியமிக்கப்பட்டிருப்பதோடு, நீர் இறைவனால் இறைதூதராக நியமிக்கப்பட்டிருக்கிறீர் என்பதை உமக்குத் தெரிவிக்க இறைவனால் அனுப்பப்பட்ட வானவன் நான்’ என்று அவ்வுருவம் தன்னை அடையாளம் காட்டியதோடு, முஹம்மது இறைவனின் நபியாக-தூதராக நியமிக்கப்பட்டுள்ளதையும் அறிவித்து, அவரை ஓதப் பணித்தது.

“உதிரக் கட்டியிலிருந்து மனிதனைப் படைத்த படைப்பாளரான உமது இறைவனின் திருநாமத்தால் ஒதுவீராக! எழுதுகோலினால் கற்பித்தவனான உமது இறைவன் ஈகை உள்ளவனாவான். மனிதன் அறியாத