பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

199

லாகக் கருதி வழிபட்டு வந்த இறையில்லத்தை உடைப்பார்களா? கோயில் கட்ட கோயிலை இடிக்கும் விந்தை மனிதர்களாக மாறியிருப்பார்களா?

இத்தகையவர்களுக்கு உண்மையான சமய உணர்வு மட்டுமல்ல, சமுதாய உணர்வும் இல்லை என்றே கூற வேண்டும்.

தனிமனிதனின் கடமைகளும்
சமுதாய மனிதனின் கடமைகளும்

ஒவ்வொரு மனிதனும் இரு வகைகளில் இயங்குகிறான். ஒன்று, தனிமனிதன். மற்றொன்று சமுதாய மனிதன். வீட்டளவில் அவன் வாழும்வரை தனி மனிதன். வீட்டை விட்டு வீதியில் காலெடுத்து வைக்கும்போது அவன் சமுதாய மனிதனாகி விடுகிறான். வீட்டிற்குள் இருக்கும் தனிமனிதன், தன் விருப்பம் போல் அனைத்து உரிமைகளையும் சுதந்திரமாக நான்கு சுவற்றுக்குள் அனுபவிக்க முடியும். ஆனால், அதே மனிதன் பல்வேறு உணர்வுகளும் சிந்தனைகளும் கருத்துகளும் உலவும் வீதிக்கு வரும்போது அவன் உரிமைகளும் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்படுகிறது. வீதியில் கழியைச் சுழற்றிச் செல்ல உரிமை உண்டெனினும் அது பிறர் மீது படாதபடி சுழற்றிச் செல்லவே உரிமை உண்டு.

சமயம் என்பது தனி மனிதன் சம்பந்தப்பட்டதாகும். சமயத் தத்துவங்களும் உணர்வுகளும் மனம் சம்பந்தப்பட்டதாகும். இறையுணர்வால் தங்கள் உள்ளத்தைப் பொங்கிப் பொழியும்படி செய்வதன் மூலம் இறையருளைப் பெற முடியும் என்பதுதான் ஒவ்வொரு சமயமும் உணர்த்தும் உண்மை.

இதற்காக அவரவர் எந்த அளவுக்கு மனப்பக்குவமும் ஆன்மீக உணர்வும் இறைப்பற்றும் பெறுகிறாரோ அந்த