பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தருமங்களைச் செய்யச் சொல்லாத சமயமே உலகில் இல்லை எனலாம். ஆனால் இஸ்லாமிய நெறி தங்கள் செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கைத் தானம் செய்வதைக் கட்டாயக் கடமையாக்கியுள்ளது. புனிதப் பயணம் சென்று இறையில்லம் முன்பு எல்லோரும் சமம் என்பதை மெய்ப்பிக்க வேண்டுமென விதிக்கிறது. இந்த வரன் முறைக் கோட்பாட்டுக் கடமைகள் மட்டுமே பிற சமயங்களிலிருந்து இஸ்லாத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

மேலும், இறைவன் தன் திருமறையாகிய திருக்குர்ஆனில்,

“(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாம்தான் உம்மீது அருளினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவற்றைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது.”

(குர் ஆன் 5:48)

எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இஸ்லாமியத் திருமறை, கடந்த காலங்களில் இறைவனால் தம் தூதர்கள் மூலம் வழங்கப்பட்ட உலகத்து மூல வேதங்களைப் பாதுகாக்கும் ஒன்றாகவும் அமைந்திருப்பதை அறிந்துணர முடிகிறது.

பிற சமயப் பழிப்பு
இஸ்லாமிய நெறிக்கு மாறானது

இவ்வாறு மக்களுக்கு நேர் வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களின் மீதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களின் மீதும் நம்பிக்கை வைப்பவனே உண்மையான முஸ்லிமாக இருக்க முடியும் என்பதை,