உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி அழைக்கும் திருக்கூட்டத்தினரின் தித்திப்புச் சொற் களால் தேய்ந்து விடக் கூடியதல்ல ! மாளிகைக்காரர் உருட்டி விடும் பணக் குண்டு களால் மாய்ந்து விடக் கூடியதல்ல! திராவிடத்தை ஒப்புக்கொள்கிறாயா என்று கேட்பது, ஒப்பந்தப் பிச்சை என்று கோணல் மொழி பேசி, கொள்கையை விலை கூறி "பார் பார் பட்டணம் பார்!" என்று அரசி யல் விளம்பரச் சூதாட்டமாடுபவர்களின் தந்திர மொழி களால் தவிடு பொடியாகிவிடக் கூடியதல்ல! திராவிடம்! தணலில் போட்டால் மாற்று உயரும் தங்கம்! உடைக்க உடைக்க ஒளியேறும் வைரம்! தங்கத்தை இழக்க மாட் டான் தன் மதிப்புள்ள திராவிடன்! அதுவும்- பித்தளை யோடு பண்ட மாற்று செய்து ! க வைரத்தை கொடுக்க மாட்டான் வீரத்திராவிடன்! அதுவும், கூழாங்கல்லை பதிலுக்குப் பெற்றுக் கொண்டு! அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரு வான மாற்றமில்லாத மாணிக்கக் கொள்கை! அதற் கான எல்லா நடவடிக்கைகளையும் ஏற்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வாசகத்தை மன திலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும், திராவிட சமு தாயம். பொதுச் செயலாளர் கூறியது போல ஐம்பத்தி நாலாம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்துவோம். அறுப் திலே திராவிடத்தில் வாழ ஆவன செய்திடுவோம். அதற்கான அடிப்படை வேலைகளை இப்போதே தொடங்குவோம். தேர்தல் தெம்மாங்கு மட்டுமல்ல, இப் 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/15&oldid=1706254" இலிருந்து மீள்விக்கப்பட்டது