உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு விடுதலையின் பொன் மொழி அவர்களுக்கு ஒரு பாட மாக இருக்கட்டும்! "உள்ளன்புடன் குலவுகிற மனைவியை அலட்சிய மாகக் கருதிக் கொண்டு நடனமாடும் விலை மாதின் கண் வெட்டிலும் தளுக்குப் பேச்சிலும் மயங்கி அவளைத் துரத்திக் கொண்டு அலைகின்ற கணவனுக்கு என்றே னும் ஒரு நாள் நல்ல புத்தி வந்துதான் தீரும்." திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கம்யூனிஸ்டு கள் பலஹீனமான கட்சி என்று கருதவில்லை யென் பது நமக்கு நன்றாகத் தெரியும். C தலைவர்-பத்திரிக்கை ஆசிரியர்-சொற்பொழிவாளர் கமிட்டி- செயலாளர், அறிக்கை விடுப்போர் ஆலோசனை சொல்பவர் பொருளாளர் எல்லாமே ஒருவராக இருந்து பல பல அவதாரங்களில் நடத்தப்படும் கட்சியல்ல தி.மு.கழகம் ன்பதைக் கம்யூனிஸ்டுகள் நன்கறிவர்! "பத்துப் பதினைந்து சிறுவர்கள்! பாவம்; நல்லவர் கள்' என்பதற்காகக் கம்யூனிஸ்டுகள் பிரியங்காட்ட வில்லை யென்பதும் - பத்துப் பதினைந்து சிறுவர்கள், பகைவரும் மலைக்கும் படியான - கிழவர்கள் வயிறு எரி யும் படியான மாநாட்டை நடத்திக் காட்டினார்கள் என்ற அளவில் நமது சக்தியை அவர்கள் உணர்ந்துதானிருக் கிறார்கள். சென்னையைச் சுற்றி இரண்டு முன்று கூட்டங்கள் பிரமாத விளம்பரத்தில் நடைபெற்ற அந்த நாளிலே 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/28&oldid=1706268" இலிருந்து மீள்விக்கப்பட்டது