உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி சென்னையிலேயுள்ள பெரும் முதலாளிகளின் பட்டி யலிலே முதல் வரிசையிலே இடம் பெறும் டி.டி. கிருஷ் ணமாச்சாரி அவர்களின் அரசியல் வாழ்வை அவ்வளவு எளிதில் மறந்துவிடும் ஏமாளிகளல்ல சென்னை வாசி கள். 1936-ம் ஆண்டு, எந்தக் காங்கிரஸ் சார்பாக டி.டி.கே.நிற்கிறாரோ அதே காங்கிரசை வர்த்தகர் சபையின் சார்பிலே தேர்தலிலே எதிர்த்துப் போட்டி யிட்டதும் அரசியல் நிர்ணய சபைக்குக் கொல்லை வழி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அரசியல் திட்ட நிலை அமைப்புக் குழுவில் உறுப்பினரானதும், திராவிட மக்களின் ஜீவாதார உரிமைகளைப் பறிக்கும் அடிமைச் சாசனத்தைத் தயாரிக்கும் சத்காரியத்தில் அவர் கொண்ட பங்கும் திராவிடர்களின் உள்ளத்தி லிருந்து மறைந்து விடவில்லை. கம்யூனல் ஜி. ஓ. என்ற வகுப்புவாரி உத்தரவு திராவிட மாணவர்களுக்கும் உத்தியோகத் துறையிலும் செய்துவந்த பேருபகாரத்தை நன்றியுள்ள திராவிடன் எவனும் மறக்க மாட்டான். அத்தகைய வகுப்புவாரி உத்தரவை இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், அரசியல் சட்டத்திற்கு, தி.மு.க. வின் தலைமையில், தமிழகத்தில் சண்டமாருத 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/43&oldid=1706286" இலிருந்து மீள்விக்கப்பட்டது