பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற்றுப் பிறந்தவன் என்பது மகாபாரதத்திற்கண்டது. இதல்ை போர் வன்மையை மிகுத்துக் கூறியதாகும். பல்லவர் பட்டயங்களிற் காணப்படும் கந்தியும் கணிச்சி யும் ஆகிய இலாஞ்சனேகள் அசுவத் காமா உண்டான தற்குக் காரணமாகிய சிவபிரானுக்கும் யமனுக்கும் உரியனவாம். இயைபு நோக்கிப் பொறிக்கப்பட்டன. என்று துணியத் தகும். யமனுக்குக் கணிச்சி யுண் டென்பது கணிச்சிக் கூர்ம்படைக் கடுந் திற லொருவன் பிணிக்குங் காலை யிரங்கு வீர் மாதோ' (புறம். 195) என்பத ைலறியலாம். இவ் வசுவத்தாமாவின் மகன் பல்லவன் என்பது பல்லவ சாசனங்கள் பலவற்றினுங் ாண்டது. அமராவதியில் ஒரு துாணிற் பொறித்த பல்லவ சாசனப் பகுதியில் (No.32.Wo1. I) அசுவத்தாமன் மதனி என்னும் அப்லாஸ்லை மணக்க அவள் அசோக மரத்தின் பல்லவங்கட்கிடை மகவினே யின்றபோது அம் மகவைப் பல்லவத் தொட்டிலிற் கண்டு, பல்லவன் என்று அசுவத்தாமன் பெயரிட, அக்குழவி பல்லவன் என வழங்கப்பட்டதென்று கூறுதலானும் பல்லவன் திரைதரு மரபின் உண்டாதல் அறியலாம். இவற்ரும் பல்லவர் தம்மைப் பாரத்வாஜ கோத்திரத்தினர் என்று கூறிக்கொண்டே ராஜ பரம்பரையின ராகவுங் கூறுதற் குக் காரணம் இனிது தெளியலாம். பாரத்வாஜ கோத் திரத்துக் கொன்றி அ ஹிச்சக் காடாண்ட தல்ை இரு குலப் பெயரும் புனேந்தனராவர். பிற்கால சாசனங்கள் இவரைப் பிரம கடித்திரிய குலமென்று கூறுவது கேட் டுனர்க. இப் பல்லவர் சாசனங்களில் இவர் பரம்பரை யினர் பலர்க்கும் இறப்ப முன்வைத்துள்ள விமலனுக்கு அடுத்து வந்துள்ள கொண்கணிகன் என்னும் பெயர் கடற் றிரையின் வழியினன் என்பதை வலியுறுத்துவது மகா பாரதம். ஆதி பர்வம்.