பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பெரும் பெயர் முருகன்

"என் கணவர் விரைவிலே வந்து சேரவேண்டும்’ என்று நேர்முகமாகக் கேட்கவில்லை. முருகா, ஊருக்குப் போன வருக்கு வேண்டிய பொருள் விரைவிலே கிடைக்கும்படி : அருள் புரிய வேண்டும்” என்று பணிந்து இறைஞ்சுகிருள்.

போர் செய்யச் சென்ற படைக்குத் தலைவகை ஒரு விரன் சென்றிருக்கிருன். அவன் மனேவி திருப்பரங்குன் றத்தில் நடைபெறும் விழாவிற்கு வந்திருக்கிருள். அவள் முருகனே, "கடவுளே, என் காதலர் யுத்தத்தில் பகைவரை அடுவாராக!” என்று வேண்டுகிருள்; அர்ச்சனை செய்கிருள். --

பிரியாமல் சேர்ந்திருக்கும் கணவரும் மனைவியரும் முருகனைப் பரங்குன்றில் வணங்குகின்றனர்; பிரிந்து வாழுவோர் மீட்டும் கூட வேண்டுமென்று வழிபடு கின்றனர். х x

மழை வேறு இடங்களில் பொய்த்துப் போனலும் இங்கே அருவி நீர் இடையருமல் இருக்கும். 'இந்த இயற்கைச் செல்வம் என்றும் அழியாமல் இருக்க வேண் டும்' என்று நல்லந்துவனுர் தாம் பாடிய பாட்டின் இறுதியில் வேண்டுகிருர், . . .

k

நல்லழிசியார் பாட்டு

நல்லழிசியார் என்ற மற்ருெரு சங்கப் புலவர் ஒரு பாடல் பாடியிருக்கிருர்.

மதுரையிலிருந்து மாலைக் காலத்தில் திருப்பரங்குன்றத் திற்கு வருகிருர்கள் பலர். வாத்தியங்கள் இசைத்துக் கொண்டு துாபதீபங்களுடன் சந்தனம் முதலியவற்றையும் எடுத்துக்கொண்டு வருகிருர்கள். வேறு சிலர் நல்ல அழகிய ஆடைகளையும் மணியையும் வேலையும் ஏந்தி வரு