பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பெரும் பெயர் முருகன்

அருவிலை நன்கலம் அமைக்குங் காலை

ஒருவழித் தோன்றியாங்கு என்பது புறநானூற்றில் வரும் பாட்டு. 'பொன், பவளம், முத்து, மாணிக்கம் ஆகியவை தூரத்திலே பிறப்பன ஆலுைம் ஆபரணம் செய்கையில் ஒன்று படுவது போல” என்று சொல்கிருர் புலவர். இங்கே துகிரும் முத்தும் சேர்ந்து வருகின்றன.

தூசா மணியும் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினதன் பருளால்

ஆசா நிகளம் துகளாயினபின்

பேசா அநுபூ திபிறந் ததுவே என்பது கந்தர் அநுபூதியில் வரும் பாட்டு. இதில் முதல் அடியில் வள்ளியெம் பெருமாட்டியைச் சொல்கிருர் அருணகிரி நாதர்.

இப்போதுள்ளபடியே வைத்துப் பொருள் செய்தால், 'ஆடையாக மணியையும் துகிலேயும் புனைபவள்' என்று முதலடிக்கு அர்த்தம் கொள்ள வேண்டும். தூசு, துகில் என்பன ஆடையாக மணியைக் கொள்வதென்பது வாழ்வி லுள்ள வளப்பத்தைக் காட்டும். அன்றியும் தலைவியைக் காண வரும் தலைவன் தழை யாடையையும் மணி யாடை யையும் கொடுப்பதாகப் புலவர்கள் பாடியும் இருக்கிருர் கள். ஆனல் துகிலேத் துளசாகப் புனைவாளென்பதில் சிறப்போ நயமோ இல்லை. -

இதைக் கவனித்த சிலர் தூசா என்பதற்கு, துாசு போக்காத' என்று பொருள் செய்து, சாணே யிடப்படாத மணியையும் துகிலேயும் புனைவாள், என்று உரை எழுதினர்,