பக்கம்:பெரும் பெயர் முருகன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசாரி பாட்டு - 49

அப்படியே முருக வழிபாடு தமிழ் நாட்டில் தலைமை பெற்றதென்பதற்கு அடையாளம், உயர்ந்த அறிவு படைத்த ஞானியரும், இந்த உலக வாழ்வில் ஈடுபட்டு வாழ்பவர்களாகிய மலே வாழ் சாதியினரும், இடைப்பட்ட பிறரும் தங்கள் தங்கள் இயல்புக்கு ஏற்றபடி முருகனேக் கொண்டாடுகிருர்கள் என்பது, வேதம் வல்ல வித்தகரும், ! விரதம் வல்ல முனிவரும், அறிவு மிக்க சான்ருேரும், புலமை மிக்க புலவாணரும், நாகரிகம் மிக்க நகரவாசிகளும் முருகனே வழிபடுபவர். அவ்வாறே குறவரும், கொல்லுக் தொழிலையுடைய வேட்டுவரும், பிறரும் முருகனை வழிபடு வர். இப்படி, தோட்டி முதல் தொண்டைமான் வரையில்’, வேட்டுவர் முதல் வேந்தன் வரையில் அப்பெருமானேக் கொண்டாடும் நெறி தமிழ்நாட்டில் அமைந்ததல்ை இந்த நாட்டுக்குச் சிறந்த கடவுள் முருகன் என்று அறிஞர் கூறினர். - . - பலரும் பரவும் தெய்வம் முருகனக இருப்பினும் அவனை வழிபடும் முறை அந்த அந்தக் குழுவிற்கு ஏற்றபடி வெவ்வேறு வகையாக அமையும். குறவர் கூடி ஆடறுத்து வெறியாடி முருகனே வழிபடுவர். காட்டில் உள்ளார் கடம் பிலும் ஆலமரத்திலும் முருகனே வழிபடுவர். ஆற்றங். கரையில் வாழ்வார் நீர்த்துறையில் முருகனை வழிபடுவர். இவ்வாறே சதுக்கத்திலும் சந்தியிலும் ஆற்றிடைக் குறை யிலும் பூம்பொழிலிலும் முருகனுக்கு வழிபாடு எடுப்பது தமிழர் மரபு.

இவற்றையன்றி அங்கங்கே உள்ள திருக்கோயில் களில் பூசையாதியன நிகழ்த்தியும் முருகனே வழிபட்டனர். உருவம் கடந்த கிலேயில் அவனே வழிபட்டனர் மெய்ஞ்ஞா னியர். பல பல உருவம் வைத்து வழிபட்டனர் வேறுபல்ர். உருவமும் அருவமும் இல்லாத கிலேயில் கந்திலும் கடம் லும் முருகனப் பூசித்தனர். வேறு சிலர். - - -