பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

11


செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடிக்க வேண்டுமே என கவலைப்படுகிறேன். செல்வமங்கையர் சிலரைக் கண்டு அளவளாவுவதற்காக நான் அங்கு வருவதால் மூன்று நாட்களை வீணடிக்க என்னால் இயலாது” என்று எழுதி அனுப்பினார்.

திருட்டால் ஏற்பட்ட பலன்

ஷாவின் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினரின் கோட்டு திருட்டுப் போயிற்று. அவர், திருட்டுக்காக இன்ஷ்யூர் செய்திருந்ததால், அந்த நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டது. ஷாவையும் மீறி போலீசுக்குச் செய்தி எட்டியது. ஆனால், திருடன் அகப்படவில்லை. அதற்குப் பதிலாக ஷாவுக்கோ அதிகச் செலவு உண்டாயிற்று. வாசல் கதவுகள் உறுதியாக்கப்பட்டன. அதைப்பற்றி ஷா,

“எனக்குச் செலவு ஏற்பட்டது. அதனால் சிலருக்குச் சில நாட்கள் வேலை கிடைத்ததைப்பற்றி திருடன் மகிழ்ச்சி அடையலாம். உறுதியான புதிய கதவுகளால் என்னுடைய மாடிப்பகுதி தனிப்பட்ட பைத்தியக்காரர் வீடுபோல் காட்சி அளித்தது” என்று குறிப்பிடுகிறார்.

கட்சிப் பத்திரிகை

“ஒரு கட்சிப்பத்திரிகையை மட்டும் படிப்பவன் உண்மை எதையும் உணர முடியாது, தன் கட்சிப் பத்திரிகையைக் காசு