பக்கம்:பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்

33


(ஸால்ட் என்பவர், ஷா தமக்கு எழுதியக் கடிதங்களை அமெரிக்கப் பிரசுரகர்த்தருக்கு விற்று, அந்தத் தொகையில் ஒரு வீடு வாங்கி, ஷா இல்லம் என்று பெயர் சூட்டினார். அதை நினைவுகூர்கிறார்)


கடவுளிடம் தகராறு

“பெர்னார்ட் ஷா செய்த சேவைகளில் மிக உயர்ந்தது எது?” என்று எனக்கும் என் மனைவிக்கும் எப்பொழுதுமே கருத்து வேறுபாடு உண்டு.

“அவருடைய சமதர்ம நூல்களும், சொற்பொழிவுகளுமே உயர்ந்தவை” என்று அவள் கூறுவாள்.

“அவர் சிறந்த நாடக மேதை” என்பது என் மதிப்பு.

ஒரு சமயம், ஷாவிடமே, “மனித சமுதாயத்துக்கு நீங்கள் வழங்கியவற்றில் எது மிக உயர்ந்தது? உங்களுடைய சமதர்மப் பிரச்சாரமா? அல்லது நாடகங்களா?” என்று கேட்டாள்.

“என் பிரசாரத்தை எவன் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் என் நாடகங்களை வேறு எவனும் எழுதியிருக்க முடியாது. நான்தான் அவற்றை எழுத வேண்டியதிருந்தது. அவையே, நான் என்று சொல்லும்படி என் வாழ்க்கையிலே ஒரு பகுதியாகிவிட்டன” என்றார் ஷா,

என் மனைவி அதோடு விடவில்லை, “அது சரி, நீங்கள் பரமண்டலத்துக்குச் சென்று, கடவுளின் முன் நிற்பதாக