பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

நிலைப் பொருள்களால் (Protoplasm) ஆக்கப்பட்டிருக்கிறது. உயிர் நிலைப் பொருள்கள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும் மிக நுண்ணிய பொருள்களால் உண்டானவை. இந்த நுண்ணிய பொருள்களிலும் தனிப்பட்ட ஒரு சிறு பகுதி உள்ளது. அதையே உட்கரு (Nucleus) என்கிறோம். ஆகவே, ஒவ்வோர் அணுவிலும்

படம் 1

சில உயிர்நிலைப் பொருள்களும் ஒரு உட்கருவும் இருக்கின்றன.

பாரம்பரியத்துக்கும் இந்த அணுக்களுக்கும் முக்கியமான தொடர்பு இருக்கிறது. மனித தேகத்தின் நிறம் பிறவியிலேயே அமைகிறது. ஓரளவுக்கு அது சூழ்நிலையால் மாறுபடலாமெனினும் முக்கியமாகப் பாரம்