பக்கம்:பேசாத பேச்சு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரக்கர் கோபம் 95

ஆகவே அவர்கள்பால் உண்டாகும் சினம் ராட்சசச்

செயல்களேச் செய்கிறது.

சிலம்புகள் சிலம்பிடை செறித்தகழ லோடும் நிலம்புக மிதித்தனள் நெளித்தகுழி வேலைச் சலம்புக அனஸ்தறுகண் அந்தகனும் அஞ்சிப் பிலம்புக நிலக்கிரிகள் பின்தொடர வந்தாள். (சிலம்புகள் - மலகள். வேலை - கடல். தறுகண்.

கொடுமை. பிலம் - பாதாளம்)

அவள் புகுகையில் சுற்றும் நிகழும் நிகழ்ச்சி இது. இனி அவள் திருமேனியில் கோபம் கொள்ளும் கோலம் எத்தகையது?

புருவங்கள் து டி க் கி ன் ன. இயற்கையாகவே வெளியே தெரிந்துகொண்டிருந்த பிறைபோன்ற கோணற். பற்கள் இரண்டு கடைவாயினும் அடிவரைக்கும் தெரியும் படியாக வாயை மடித்துக்கொண்டாள். அந்த வாய்தான் மலை முழையைப்போல அல்லவா தோற்றுகிறது? அவள் கோபத்தால் விழித்துப் பார்க்கிருள். வேத நெறிக்குப் புறம்பான காரியத்தைச் செய்யும் அந்த அாக்கியின் கண்கள் அப்போது கடலில் இரண்டு வடவைத் தீ

எழுந்தாற்போலக் தியைக் கக்கின.

இறைக்கடை துடித்தபுரு வத்தள் எயி றென்னும் பிறைக்கட்ை பிறங்கிட மடித்தபில வாயள் மறைக்கடை அரக்கிவட வைக்கன்ல் இரண்டாய் நிறைக்கடல் முளைத்தென நெருப்பெழ விழித்தாள். (இறை-சிறிதளவு பிறைக்கடைபிறையினது அடி. . மறைக்கடைப்வேதத்துக்குப் புறம்பான கிறைக்கடல்-நீர் கிறைதலையுடைய கடல்.) " - - . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/104&oldid=610259" இலிருந்து மீள்விக்கப்பட்டது