பக்கம்:பேசாத பேச்சு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140. - ... - - பேசாத பேச்சு

கள பேசாமற் பேசுவதைக் கேளாமற் கேட்கிரு.ர்கள். சன காதி முனிவர்களுக்கு ஞான உபதேசத்தைச் சொல்லாமற். சொன்ன துாை'யாகிய அப்பெருமானே, கேளாமே யாவும் கேட்கின்றன். அவனருளில் ஊறிய மெய்ஞ்ஞானச் செல்வர்களும் கேளாமற் கேட்டு அநுபூதி பெற்றுப் பேசா மற் பேசிக் களிக்கிரு.ர்கள். அந்தப் பேசாத பேச்சானது பேசுகின்ற பேச்சிலும் உயர்ந்தது; துண்மையானது; அறி வுடையோருக்குப் புலப்படுவது. அதனைக் தெரிந்து கொண்டவர்கள் ஞானியரும் கவிஞரும். ஞானியர் பேசாத பேச்சை உணர்ந்து இன்புறுகின்றனர். கவிஞர் பேசாத பேச்சை உணர்ந்து இன்புற்று, பேசுகின்ற பேச்சிக் ேைல நமக்குக் தெளிவுறுத்தி நம்மையும் இன்புறுத்து கின்றனர். நாமும் பேசாத பேச்சை அறியும் துறையிலே பயிற்சி பெற்ருல் உலக முழுவதும் திறந்த புத்தகமாக, உபதேச குருவாக இருப்பதைக் காண்போம். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/149&oldid=610304" இலிருந்து மீள்விக்கப்பட்டது