பக்கம்:பேசாத பேச்சு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் பேசும் 17

ஒருவரை ஒருவர் கண்டு மனம் ஒன்றுபடுவார்கள். இது கண்டதும் காதல்’ என்ற வகையைச் சார்ந்தது அன்று. பிறவிதோறும் காதலராக இருந்த வாசனையில்ை உள்ளத்துள்ளே மறைந்து கிடந்த காதல் ஒருவரை ஒருவர் கண்டபோது வெளிப்படுகிறது. இவனுக்காகவே இவள் படைக்கப்பட்டாள்; இவளுக்காகவே இவன் படைக் கப்பட்டான்' என்ற நியதியின்படியே நடப்பவர்கள், இந்த லட்சியக் காதலர்கள். அவர்கள் முதல் முதலில் காண்பதைப் பழைய இலக்கணமாகிய தொல்காப்பியம் பின்வருமாறு சொல்கிறது:

ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப; மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே.

(பால்வயின் - பகுதியில். பாலது ஆணேயின் - ஊழ் வினேயின் கட்டளையாலே. கிழவன் - காதலன். கிழத்திகாதலி. காண்ட - கானுவார்கள். கடிவரை இன்று. விலக்கு இல்லே.) -

காதலர் ஒரே ஊர்க்காாாக இருந்தாலும் ®ಹಹಹ லாம்; வேற்றார்க்காரர்களாகவும் இருக்கலாம்; இதைத் தான் முதல் அடி சொல்கிறது. •3 . - ஒன்றே வேறே என்று இருபால் வயின் - இரு வருக்கும் ஒரிடமும் வேற்றிடமும் என்று கூறப்பட்ட இருவகை நிலத்தின் கண்ணும்' . - . . -நச்சினர்க்கினியர் உரை. காதலரைக் கூட்டி வைக்கத் தெய்வம் முன்னே கிற் கிறதாம். ஒவ்வொரு பிறவியிலும் அவ்விருவரையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/26&oldid=610181" இலிருந்து மீள்விக்கப்பட்டது