பக்கம்:பேசாத பேச்சு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராமாயணத்தில் 41 சீதையை முன்பின் கண்டறியாதவன் அவன்; அவள் தன் நிலையை வாய்விட்டும் கூறவில்லை. இந்த நிலையில் அவள் கண்களே அவனுக்கு உண்மையைப் புலப்படுத்தின. அதனே உணரும் ஆற்றலுடையவன் அநுமன். உணர்ந்து சீதையைப் பலபடியாகத் தன்னுள்ளே வியந்து பாராட் டின்ை.

சீதையைக் கண்டதை ராமனுக்கு விரிவாகச் சொல்லு மிடத்துக் கண்களின் புறத் தோற்றத்தை நினைவு கூர்ந்து, கண்ணிர்ப் பிாவாகத்தில் அவள் வீற்றிருந்ததைக் கூறு கின்ருன் : -

..................அனங்க குளேக் கலங்குதெண் திரையிற் முய கண்ணினிர்க் கடலிற் கண்டேன். அவள் ராமனேயே எண்ணி வாடினுள். ராமன் வரு வான் வருவான் என்று திக்கெல்லாம் நேர்க்கியிருந்தாள். அவள் கண்ணிலே அவள் கருத்து.. ராமனேயே எதிர் நோக்கிக் காத்துத் தவம் புரியும் கருத்து - எழுதியிருந்தது போலும் - -

கண்ணினும் உளைநீ தையல் கருத்தினும் உளை என்று சொல்லுகின்றன்.

இப்படிப் புறங் காணவும் அகங் காணவும் சீதையின் கண்கள் உதவியமையால், - கண்டெனன் கற்பினுக்கு அணியைக் கண்களால் என்ற கூறினன் அதுமன். குறிப்பினுல் உணரும் கொள் கையில் அவனும் சிறந்து நிற்பவன் அல்லவா ? .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பேசாத_பேச்சு.pdf/50&oldid=610205" இலிருந்து மீள்விக்கப்பட்டது