உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பேசும் கலை வளர்ப்போம் முன்னால் நின்றார். கை கால்கள் உதறல் எடுத்தன. எத்தனையோ இயக்குனர்களை, நடிகர், நடிகைகளை, திரையுலக நிபுணர்களை உருவாக்கிய பெரியவர் அவர்! நூற்றுக்கணக்கானவர்கள் அவரது நிறுவனத்தில் பணிபுரி கிற அளவுக்கு படத்துறையில் சிறந்த அனுபவம் பெற்ற வர். இந்தி மொழியிலும் கூடப் பீடங்கள் எடுத்து, தமிழ கத்துக் கலைத் திறனை வெளிப்படுத்தியவர். மலை போன்ற உருக்கொண்டவர். அப்படிப்பட்டவர் ஒலிபெருக் கியின் முன்னால் நின்றவுடன் வியர்வைக் கடலில் மிதந் தார். இறுதியாக அவர் பேசியது என்ன தெரியுமா? .. .. "நானும் நீங்களும் கண்டு களித்த இந்த இந்த பொம்மன் கட்டன் நாடகமானது... 97 அதுவரையில் அவையோர் சும்மா இருப்பார்களா! அதிர் வெடிச் சிரிப்பு! இதற்குமேல் அவருக்குத்தான் பேச வருமா? முடியுமா? இதிலிருந்து, பேசும் கலைக்குப் பெருமை சேர்க்க வேண்டுமானால், முதலில், கூட்டத்தைக் கண்டு ஏற்படுகிற அச்சத்தை மெல்லமெல்ல ஒத்திகை பார்த்தாவது போக்கிக் கொள்ள வேண்டும் என்ற உண்மை புரிகிறதல்லவா? 3 தமிழை, இயல் -இசை-கூத்து என மூன்றாகப் பிரித் துள்ளனர் நமது முன்னோர். எண்ணிலடங்கா ஆண்டுகட்கு முன்பு, மனிதர்கள் நிர்வாணமாகத் திரிந்துகொண்டிருந்து பின்னர் இலை தழைகளைக் தழைகளைக் கட்டிக்கொண்டு, இடுப் புக்குக்கீழே மட்டும் உறுப்புக்களை மறைத்துக் கொண்டி ருந்த அந்தக் காலத்தில் இயல் என்பது முதலாவதாகவும், இசையென்பது இரண்டாவதாகவும், கூத்து என்பது மூன்றாவதாகவும் அமைந்திருக்க முடியாது! சொற்களை