உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 19 உச்சரிக்கிற வார்த்தைகளுக்கும் அவரது உள்ளத்திற்கும் சம்பந்தம் இருக்கமுடியும். அப்படித் தொடர்பு இருந்தால் தான் உணர்ச்சியோடு அந்தக் கருத்துக்களைச் சொல்ல முடியும். வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என்னை அவரது தொகுதிக்குப் பாராட்டு விழாவுக்கு அழைத்துச் சென்றிருந்தார். முதல் நிகழ்ச்சியில் பேசும் போது அவர் குறிப்பிட்டார், "தொகுதி மக்களே! தேர்தல் நேரத்தில் உங்களுக்கு ஒரு பெரிய வாக்குறுதி கொடுத் திருந்தேன். அதாவது என்னை ஜெயிக்க வைத்தால் கலைஞரை அழைத்து வருவதாக! இப்போது அவரை அழைத்துவந்து வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்" என்று! அடுத்து நான் பேசும்போது, "என்னை அழைத்து வருவது என்பதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதி அப்படி யொன்றும் பெரிதல்ல! மலிவான வாக்குறுதிதான்! நான் எப்போதும் மக்களைச் சந்தித்துக்கொண்டே இருப்பவன்" எனக் குறிப்பிட்டேன். பிறகு அதே தொகுதியில் இன்னொரு இடத்தில் கூட்டம்! அந்தச் சட்டமன்ற உறுப்பினர் அங்கேயும் என்னை வரவேற்றுப் பேசினார். என்ன பேசினார் தெரியுமா? ங்கு "தொகுதி மக்களே! தேர்தல் நேரத்தில் உங் களுக்கு ஒரு மலிவான வாக்குறுதி கொடுத்திருந் தேன். அதுதான், என்னை ஜெயிக்க வைத்தால் கலைஞரை அழைத்து வருவேன் என்ற வாக் குறுதி!” இப்படிச் சொன்னதும் என்னருகே இருந்தவர்கள் திடுக்கிட்டனர். நான் சிரித்துக் கொண்டேயிருந்தேன். நான் அந்தத் தொகுதியில் முதல் கூட்டத்தில் அடக்க